tamilnadu

img

நூறு நாள் வேலைத் திட்டத்தை அரிமளம் பேரூராட்சியிலும் செயல்படுத்துக!

புதுக்கோட்டை, டிச.16-  தேசிய வேலை உறுதித் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியிலும் செயல்படுத்தக் கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதனன்று மனுக் கொடுத்து போராட்டம் நடத்தினர்.  அரிமளம் பேரூராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயல் படுத்தக் கோரி கடந்த சில வருடங்க ளாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் கட்டமாக சில பேரூராட்சிகளில் மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதாக  அரசு அறிவித்துள்ளது.  

இந்நிலையில், அரிமளம் பேரூ ராட்சியிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு விவசா யத் தொழிலாளர் சங்க மாநில பொரு ளாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். விதொச ஒன்றிய தலைவர் ஏ.மணி, விச ஒன்றிய செயலாளர் எம்.அடைக்கப்பன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமை யா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற போராட்டத்தில் 918 விவ சாயத் தொழிலாளர்கள் தங்கள் பேரூ ராட்சியிலும் திட்டத்தை செயல்படுத் தக்கோரி அலுவலரிடம் மனுக் கொடுத் ததோடு, தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் வலியுறுத்தினர். 

;