கே.சாமுவேல்ராஜ் பேச்சு
மன்னார்குடி, ஜூன் 13- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திரு வாரூர் மாவட்ட மாநாடு மன்னார்குடியில் நடைபெற் றது. மாநாட்டை முன்னணி யின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசு கையில், எல்லா கிராமங்களி லும் சாதிய தீண்டாமை ஏதோ ஒரு வடிவத்தில் இன்றும் இருக்கிறது. ஒரு கிராமத் தில், ஒரே ஒரு சுடுகாடு மட் டும் இருந்தால், அங்கே சாதிய தீண்டாமை இல்லை என நாம் கூறலாம். ஆனால் கிராமங்களில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. ஒவ் வொரு கிராமத்திலும் இரண்டு, மூன்று, நான்கு சுடு காடுகள் உள்ளன. உதாரணத் திற்கு ஒரு லட்சம் கிராமங்கள் உள்ளன என்றால், 4 லட்சம் சுடுகாடுகள் இருக்கின்றன. இதுதான் சாதிய தீண்டாமை யின் எதார்த்த நிலை. முற்போக்கான இயக்கங் கள் வளர வேண்டும். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தை இந்தியாவிலேயே உதார ணமாக நாம் சொல்ல முடிந் தது. பண்ணை அடிமை களாக இருந்த பட்டியலின தோழர்கள், தோளில் சிவப் புத் துண்டை போட்டவுடன், பிற்படுத்தப்பட்ட குடும்பங்க ளுக்கும்கூட பஞ்சாயத்து பேசி, நீதி கூறுபவர்களாக மாறியதை நாம் கண்டோம். புரட்சிகரமான மாற்றம் வந்த தால்தான் அடிப்படையில் இந்த சமூக மாற்றம் நிகழ்ந் தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி எல்லோரும் இணைந்து செயல்படுகிற பொது மேடையாக மாறி யுள்ளது. இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது; அதற்கு பதிலாக, மதத்தைச் சுற்றி, கோவி லைச் சுற்றியே அன்றாடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் திட்டம். இதைத்தான் பாஜகவும் விரும்புகிறது; ஆதரிக்கிறது. தீண்டாமை ஒழிப்பு பணியை நாம் உயிரோட்டமுள்ள இயக்கமாக மாற்றி, மக்களி டம் அதுகுறித்த விழிப்பு ணர்வை தொடர்ந்து நடத்திட வேண்டும். இவ்வாறு கே.சாமுவேல் ராஜ் பேசினார்.