திருப்புவனம் இளைஞர் அஜித் லாக்கப் மரணம் நீதி விசாரணை கோரி இன்று வாலிபர் சங்கம் போராட்டம்
சென்னை, ஜூன் 30 - அறநிலையத் துறை காவல் பணியாளர் அஜித்தை கொலை செய்த காவலர்களை கைது செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும். அஜித் மரண வழக்கில் நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்தி ஜூலை 1 (செவ்வாய்) அன்று வாலிபர் சங்கம் சார்பில் திருப்புவனத்தில் போராட் டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.கார்த்திக், மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் தாலுகா மடப்புரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணை யர் அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் காவலராக பணி செய்து வந்தார் இளைஞர் அஜித். இவர் மீது நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஜூன் 27 அன்று, திருப்புவனம் காவல் துறையினர் ஏழு பேர் மடப்புரம் கோவிலுக்கு வந்து, அஜித்தை விசா ரணைக்கு அடித்து இழுத்துச் சென் றுள்ளனர். அப்போது, அறநிலையத் துறை உதவி ஆணையர், அலு வலக விசாரணைக்கு உட்படுத்தா மல், உள்நோக்கத்துடன் காவல் துறையிடம் அனுப்பி வைத்தது போல் இருந்துள்ளார். ஜூன் 27 அன்று காலை 11 மணி முதல் ஜூன் 28 மாலை சுமார் 5.30 மணி வரை காவல்துறை வாகனத் திற்கு உள்ளேயே சிறை வைத்து அஜித்திற்கு குடிநீர் உணவு ஏதும் கொடுக்காமல் தொடர்ந்து இரண்டு நாட்களாக சித்ரவதை செய்துள்ள னர். ஜூன் 27 அன்று நள்ளிரவு, அதா வது ஜூன் 28 அன்று அதிகாலை 2 மணிக்கும், பிறகு 4.30 மணிக்கும் மடப்புரம் கோவிலுக்கு முன்புறம் கார் பார்க்கிங் இடத்தில் காட்டு மிராண்டித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை யடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டி ருந்த அஜித்தின் தம்பி உள்ளிட்ட 5 பேரை எழுப்பி வாகனத்தில் ஏற்றிச் சென்று, வன்னிக்கோட்டை கண்மாய் அருகில் மற்ற நபர்களின் முன்னி லையில் அஜித்தை தலைகீழாக மரத்தில் தொங்கவிட்டு அடித்துள்ள னர். பிறகு ஜூன் 28 அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை மடப்புரம் கோவில் அறநிலைய உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம், மாட்டு கொட்டகையில் இரும்பு கம்பி, லத்தி உடையும் அளவிற்கு அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அதன்பிறகு ஆட்டோவில் அழைத்து திருப்புவனம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தக வல்கள் வெளி வருகின்றன. இச்சம்ப வத்தின் போது, அறநிலையத் துறை அலுவலகத்தில் இருந்த ஏ.சி. உள்ளிட்ட அலுவலர்கள் கண்டும் காணாது போல் இருந்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவை பழு தாக்கி விட்டார்கள் என்றும் தெரி கிறது. அஜித்தை ஏற்றிச் சென்ற ஆட்டோ திருப்புவனம் சந்தப்பேட்டை அருகில் செல்லும் போது, மாலை சுமார் 6 மணிக்கு அஜித் மரணம் அடைந்ததாக தெரிகிறது. திருப்புவனம் காவல்துறையின் இந்த கொடூரச் செயல் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்தி நியாயம் கிடைத்திடவும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலையும், உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவராணமும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். மேலும் தமிழகத்தில் லாக்கப் சித்ரவதைகளும், மரணங்களும் தொடர் கதையாகி வருகிற நிலை யில், தமிழக காவலர்களுக்கு வழக்கு விசாரணை குறித்த மனநலப் பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் விசாரணைக்காக ஒருவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படும் முன்பே, அவர்கள் நீதி அமைப்பிற்கு முன்பு தகவல் தெரி வித்து உறுதி செய்வது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.