தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 2) நடைபெற்றது. மாவட்டத்தின் சார்பில் முதல்கட்டமாக 53 ஆறு மாத சந்தாக்கள் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா, ராஜா ரெட்டி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.