tamilnadu

தில்லியை விட்டு வெளியேறிய விவசாயிகள்

புதுதில்லி, டிச.15-  வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக திரும்பப் பெற்றதை அடுத்து தில்லி எல்லையை முற்றுகை யிட்டிருந்த போராட்ட குழுக்கள் புத னன்றுடன் முற்றிலும் வெளியேறிவிட் டன.  ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்க ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த ஒன்றிய அரசு, வேளாண் சட்டங்களை சட்டப்பூர்வமாக ரத்து செய்தது.  விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் விவசாய பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு பேசி வருகிறது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதை அடுத்து போராட்டத்தை திரும்பப் பெற்ற விவசாயிகள் போராட்டங்களின் மையமான தில்லி எல்லையில் இருந்து படிப்படியாக வெளியேறி வந்தனர்.

இந்நிலையில், போராட்டக்களத் தில் ஒரு பகுதியான தில்லி - உத்தரப்பிர தேசம் எல்லையில் உள்ள கவுஷாம்பி எல்லையில் இருந்து கடைசி விவசாயி கள் குழுவினர் புதனன்று வெளியேறி னர். தேசிய கொடிகளை ஏந்தி நடனமாடி அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதனிடையே விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டக்களத்தில் தங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தங்களது கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக மட்டுமே திரும்ப பெறப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட திகாயத், போராட்டம் மீண்டும் தொடங்குவதும், முற்றிலும் கைவிடப்படுவதும் அரசின் கையில் தான் இருப்பதாக தெரிவித்தார்.

;