tamilnadu

img

மறைக்கப்பட்ட அடிமைகளின் துயர வாழ்வு - ரமணன்

இத்தாலியில் பாம்பே தொல்பொருள் பூங்காவில் பழங்காலத்தில் அடிமைகளை அடைத்து வைத்து  ரொட்டி தயாரிக்கும் சிறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்  ளது. இரும்புக் கம்பிகளாலான சன்னலை தவிர அங்கி ருந்து வெளியேற வழி எதுவும் இல்லை. பாம்பே நகரின் வர லாற்றுப் பாடங்களில் மறைக்கப்பட்ட அடிமை மக்களின் கொடு மையான வாழ்வை இது காட்டுகிறது. அதன் தரையில் விலங்குகளின் தடங்களும் காணப்பட்டன.  அவற்றின் கண்கள் கட்டப்பட்டு பல மணிநேரம் சுற்றிவர செய்யப்பட்டன என்று கூறுகிறது அந்தப் பூங்காவின் அறிக்கை  ஒன்று. பொது ஆண்டுக்கு முன்(கிமு) 79இல் வெசூவியஸ் எரி மலை வெடித்து பாம்பே நகரம் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பாம்பே நகர அடிமை மக்கள் குறித்த கண்காட்சி ஒன்று நடத்தப்பட உள்ளதாம்.