tamilnadu

img

நீடிக்கும் ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

நாகர்கோவில், நவ.23- அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 3 அமைச்சர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாட்டை இறுதிப்படுத்தி கையெ ழுத்திட வனத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. காலம் கடத்தி தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்ய அதிகாரி கள் தூண்டியதாக குற்றம் சாட்டுகின்றனர். இதன்  பின்னணியில் தமிழக அரசின் கொள்கையும் அடங்கியுள் ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் 3 ஆண்டு கால சட்டப்பூர்வமான முத்தரப்பு (12/3) ஒப்பந்தத்தை இழுந்தடித்து காலம் கடத்துவதை அதிகாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். 31.11.2022 வரையிலான கடந்த காலத்துக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் 1-12-2019 முதல் வழங் கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகை யை உடனே வழங்க வலியுறுத்தியும் ரப்பர் கழக தொழி லாளர்கள் கடந்த 7-11-2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். கீரிப்பாறை உற்பத்தி தொழிற்கூடத்துக்கு முன்னால் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்க ளின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அனைத்து தொழ்ற்ழிற் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபமாகும் தொழிலாளர் நிலை

3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒப்பந்தம் அதிகாரிகளால் வேண்டுமென்றே காலம் கடத்தப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி யுள்ளனர்.  இதுபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 3 ஆண்டு கால ஒப்பந்தத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்து தொழிலாளர்களிடம் அதிகாரி கள் திணித்தனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாததால், 14-ஆவது ஊதிய பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடவில்லை என்று சிஐடியு அறிவித்தது. இது கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பும் ஒரு கொள்கை நிலைப் பாடு என சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. ஒப்பந்த காலம் அதிகரிப்பதால் ஏற்படும் ஊதிய இழப்பு ஏழைத் தொழிலா ளர்களின் வாழ்வில் இட்டுநிரப்ப முடியாத இடை வெளியை ஏற்படுத்திவிடும் என்பதே சிஐடியு எதிர்ப்புக்கு  காரணமாகும். இதில் முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட நிலைப் பாட்டையே திமுக அரசும் கொண்டுள்ளதாக தொழிற் சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர். அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமானது. வேலைப் பளு அதிகரித்துள்ள அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்திருக்க வேண்டிய ஊதிய உயர்வுக்காக இப்போது வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிர்வாகம் இரண்டு ஒப்பந்த காலத்தை (6 ஆண்டுகள்) விழுங்கிய நிலை யில் தற்போது பேசி முடிக்கப்பட்ட தினசரி ஊதியத்தில் ரூ.40 உயர்வு என்பதுகூட இன்றைய விலைவாசி உயர்வு க்கு பொருத்தமற்றதாகி விடுகிறது. ஆனாலும், புதிய ஒப் பந்தத்தை 5 ஆண்டு காலத்துக்கு திணிக்கும் முயற்சியை தமிழக அரசும் அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.

மரங்களை விற்கும் அதிகாரிகள்

மூடப்படும் நிலையில் உள்ள தனியார் நிறுவனங்க ளில் வேலைநிறுத்தத்தை தூண்டுவதும், காவல்துறை, நீதிமன்ற துணையுடன் இயந்திரங்களை கடத்துவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. அதுபோல் தோட்டத் தொழிலா ளர்களின் போராட்டத்தை பயன்படுத்தி முதிர்ந்த மரங்களை விற்றுப் பணமாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டது அண்மையில் அம்பலமானது. இதில் சிக்கி கொண்ட அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் தின்கர் குமார் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், புதனன்று (நவ.23) அரசு ரப்பர் கழகத்தின் மண்டல அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு செய்தனர். ஆனால், காவல் துறை இதற்கு அனுமதி மறுத்தது. இது தொழிலாளர்க ளின் குரலை ஒடுக்கும் முயற்சி என சிஐடியு தோட்டத் தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதனன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சிஐடியு தலைவர்கள் நடராஜன், வல்சகுமார் உள்ளிட்டோர் கீரிப்பாறையில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரி வித்தனர். வல்சகுமார் கூறுகையில், நவம்பர் 22செவ்வா யன்றுஅரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் (பொறுப்பு), கூடுதல் வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் ஆகியோர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் ஐந்தாண்டு கால ஒப்பந்தத்துக்குதான் அழுத்தம் கொடுத்தார்கள். அதை நாங்கள் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம் என்றார். உலகத் தரத்தில் இயற்கை ரப்பர் விளையும் மண் குமரி  மாவட்டத்தின் மேற்கு பகுதி. இங்கு உள்ளூர் மக்களில் ஒரு பகுதியினருக்கும், இலங்கையில் இருந்து தாயகம்  திரும்பிய தமிழர்களுக்கும் வாழ்வளித்து வருகிறது அரசு ரப்பர் கழகம். தனியார் தோட்டங்களுக்கு முன்னு தாரணமாக விளங்க வேண்டிய அரசு ரப்பர் கழகம் சமூக நலனை புறக்கணிப்பது பாதகமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். 

-சி.முருகேசன்

 

 

;