tamilnadu

img

பாரதி என்னும் மந்திரச் சொல் - இரா.விஜயராஜன்

மகாகவி என மக்களால் போற்றி புக ழப்படும் சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்றைய தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் சின்னச்சாமி -லக்குமி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். 1921ஆம் ஆண்டு  செப்டம்பர்  (1921) 11 அன்று அதிகாலை 1.30 மணிக்கு இயற்கை எய்தினார். 39 ஆண்டு காலமே வாழ்ந்த அந்த மாமனி தனை - மனிதருள் மாணிக்கத்தை யாரும் மறக்க லாகாது.  அவருடைய பன்முகத்தன்மைக்கு எடுத்துக் காட்டாக சொல்வதற்கு ஏராளமான செய்திகள் உண்டு. 39 வயதிற்குள் இத்தனை திறமைக ளோடு வாழ்ந்த தற்போதும் நம்மோடு வாழ்ந்து வருகின்ற மனிதர்களை பார்ப்பது அறிதிலும் அறிது. கவிஞராக, எழுத்தாளராக, விடுதலை போராட்ட வீரராக, சாதி மறுப்பாளராக, பெண் விடு தலைக்கு முழக்கமிட்டவராக, பல்வேறு இதழ்க ளில் ஆசிரியராக, தமிழர் நலன், சமூக சீர்திருத்த வாதியாக இன்னும் பல பரிமாணங்களோடு வாழ்ந்த வரலாற்றுக்கு சொந்தமானவர். பாரதிக்கு 1897 ஜூன் 27 அன்று கடை யத்தைச் சேர்ந்த செல்லப்பா அய்யரின் மூன்றாம் மகளான செல்லம்மாவை திருமணம் செய்து வைத்தனர் 1898ஆம் ஆண்டு பிற்பகுதியில் தனது அத்தையின் அழைப்பின் பேரில் காசிக்கு சென்றார். அங்கு ஹிந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார்.  மீண்டும் எட்டையாபுரம் ஜமீன் அழைப்பின் பேரில் தமிழகம் திரும்பினார். 

நவம்பர் 10 வரை மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்துள்ளார். பாரதி - செல்லம்மாள் தம்பதியருக்கு தங்கம் மாள், சகுந்தலா என்ற 2 பெண் குழந்தைகள். பாரதி தான் வாழ்ந்த குறைவான ஆயுள் நாட்க ளில் பிறந்த எட்டையபுரம், சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, ஈரோடு, காரைக்குடி, காஞ்சி புரம், உத்தரபிரதேசத்தின் காசி, மேற்குவங்கம் கல்கத்தா, குஜராத்தின் சூரத் உள்ளிட்ட நகரங்க ளுக்கு பயணப்பட்டுள்ளார். பாரதி தன் வாழ்நாளில் பாப்பா பாட்டு, குயில் பாட்டு, காதல் பாட்டு, பக்தி பாட்டு, பாரத நாட்டை யும், தமிழ்நாட்டையும் புகழ்ந்த பாடல்கள், சுதந்திர பாடல், தேசிய இயக்கத்தின் மீதான பாடல், பிற நாடுகளின் மீதான விடுதலைப் பாடல், தத்துவப் பாடல், பல்சுவை பாடல்கள், புதிய ஆத்திச் சூடி, வாழ்த்துப்பாக்கள், கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், பொதுவான பாடல்கள், சமூகப் பாடல்கள், புதிய பாடல்கள் என நூற்றுக்கணக்கில் இயற்றி மகாகவியாகவே வாழ்ந்துள்ளார்.

பாப்பா பாட்டு

ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று பாப்பா பாடலின் மூலம் குழந்தைகளுக்கு போதனையையும்,  பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா வாழை குளைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா வண்டியிழுக்கும் நல்ல குதிரை  நெல்லு வயலில் உழுதுவரும் மாடு அண்டிப்பிழைக்கும் நம்மை ஆடு இதை ஆதரிக்க வேணுமடி பாப்பா  என உயிர்கள் மீது பரிவு கொண்டு பாடினார் பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று அக்கிரமங்களை கண்டால் ஆவேசம் கொள்ளச் செய்தவன் பாரதி. இதோடு விடவில்லை.  சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி - உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று சாதியை சாடி சாட்டையடி கொடுத்து கல்வி மற்றும் அன்பை போதித்தவர். ஒரே பாடலில் ஒப்பற்ற கருத்துக்களை விதைத்து உயர்ந்து நிற்கின்றார். வந்தே மாதரம் பாடலில் ஆயிரமுண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்  தம்முள்  சண்டை செய்தாலும், சகோதரரன்றோ. ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிலனைவருக்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தாற்ப்பின் நமக்கெது வேண்டும் -என்று பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுபட வேண்டுமென்ற கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார். பாரததேசம் என்ற பாடலில் வெள்ளிப்பணி மலையின் மீது  உலாவுவோம் அடி மேலைக்கடல் முழுதும் கப்பல்விடுவோம் பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்துவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள்கட்டுவோம்  பாடலில் சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம்  சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் வங்கத்திலோடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

-என கடல் வாணிபத்தையும், சேது சமுத்திர திட்டத்தை அன்றைக்கே வலியுறுத்தியும், வங்க நாட்டிலிருந்து ஓடிவரும் நதி நீரில் மற்ற மாநிலங்க ளில் பயிர் செய்து விவசாயத்தை மேம்படுத்தி பாடியுள்ளான்.

சிந்துநதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினிலே பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்ற இப்பாடலை கேட்கிற போது உருகாத நெஞ்சமும் உருகித் திளைக்கும். கப்பலோட்டிய தமிழன் படத்தில் காதல் பாடலாக வரும் பாரதியின் காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன். அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூறி ததும்பும் விழிகளும் என்ற தொடர் பாடல் காதலில் விழாவதனைக்கூட காதலிக்க தூண்டினான் பாரதி.

ருஷ்யப் புரட்சியை பாடிய கவிஞன்

1905ஆம் ஆண்டு தன்னை சந்திக்க வந்த மக்கள் நூற்றுக்கணக்கானவர்களை ஜார் மன்னன் சுட்டுக் கொன்றதை இந்தியா என்ற பத்திரிக்கையில் பாரதி எழுதியதாவது- சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங் கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்ய தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக. இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்கு பின்னர் 1917ல் லெனின் தலைமையில் மகத் தான•ரஷ்ய புரட்சி வெற்றிபெற்றது. இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினான் மாகாளி பராசக்தி ருஷ்யநாட்டினிற் கடைக் கண் வைத்தாளங்கே ஆஹா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி. கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான். வாகான தோள்புடைத்தார் வானமரர் பேய்களெல்லாம் வருந்தி கண்ணீர் போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம். வையகததீர் புதுமை காணீர் என 48 வரிகளில் இப்பாடல் நிறைவு பெறுகிறது. 

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் செந் தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சி னிலே என்று தமிழின் பெருமையையும்,  கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு என்றும், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்  பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும் ஒருசேர பாடி அவருக்கு அழியாப் புகழை அளித்திட்ட பாரதியை இந்நாளில் டிசம்பர் 11 பிறந்த நாளில் நாம் அனைவரும் நினைவுகூர்வோம். நெஞ்சங் களில் ஏந்தி போற்றிடுவோம்.

 

;