tamilnadu

img

மதுரை மாநகராட்சி துணை மேயரானார் சிபிஎம் கவுன்சிலர்

மதுரை,மார்ச் 4-  மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயராக  56 ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்  இந்திராணி, துணை மேயராக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 80 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் கா. ப. கார்திக்கேயன், அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் மேயரின் செங்கோல் கொடுத்து மேயர், துணைருக்கான இருக்கையில் அமரவைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், திமுக தெற்கு  மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோ. தளபதி , மதிமுக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.