tamilnadu

img

ஒன்றிய அரசின் பணத்தில் பாஜக தமிழகத்தில் தேர்தல் வேலையை செய்கிறது

சேலம், அக்.17- தமிழகத்தில் ஒன்றிய அரசின் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜக  தேர்தல் வேலையை செய்து வருகிறது. தமி ழகத்திற்கு வருகிற பாஜக அமைச்சர்கள் மக்கள் நிலை குறித்து ஆய்வு நடத்த வில்லை; மாறாக தொகுதி ஆய்வு நடத்து கிறார்கள் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.  பாசிச பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிறு இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா தலை மை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரை யாற்றினார். 

மாணவர் குடும்பத்திற்கு நிதியளிப்பு

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டி ற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தோழர் தாமரைச்செல்வன் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சத்தை, இப்பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாமரைச்செல்வன் குடும்பத்தினரிடம் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது:  

 உலக பட்டினி குறித்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அதில் 121 நாடுகளில் கணக்கெடுத்த அடிப்படையில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது. உலக வங்கி ஆய்வறிக்கையில் அதிகமான பணவீக்கம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆறு சதவீத மான பணவீக்கம் இருந்தது தற்போது 10  சதவீதமாக பண வீக்கம்  உள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. எட்டு ஆண்டு கால மோடி அரசாங்கத் தின் ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுள் ளது.  விலைவாசி உயர்வு, பண வீக்கம், வர லாறு காணாத வேலை இல்லாத திண்டாட்டம் - இவைகளைத் தீர்க்க வக்கில்லாத அரசாங்கமாக மோடி அரசு உள்ளது. மோடி அரசு இந்தி திணிப்பை கட்டாயம் ஆக்கி வருகிறது. சமஸ்கிருதமயப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை மத அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது விஷம் தோய்ந்த பேச்சு. 

தமிழகத்தில் மத்திய அமைச்சர்களை வைத்து சில வேலைகளை பாஜக அரசு  செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக உள்ளது. அதனால் ஒன்றிய அரசின்  பணத்தை வைத்துக் கொண்டே தமிழகத்தில் பாஜக தேர்தல் வேலையை செய்து வரு கிறது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.  இவ்வாறு அவர் பேசினார்.
 

;