tamilnadu

img

சனாதன ஒழிப்பு மாநாடு

சென்னை, ஜூலை 2 - சனாதன ஒழிப்பு மாநாடு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்துகிறது. வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தும், சமூக ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கும் சனாதனத்தை ஆதரித்து பண்பாட்டு தளத்தில் இந்துத்துவா சக்திகள் தீவிர மாக செயல்பட்டு வருகின்றன. அரசி யலமைப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழ் நாடு ஆளுநர் சனாதனத்தை ஆத ரித்து பேசி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். சனாதனத்திற்கு தவறான அர்த்தம் கற்பித்து வரு கிறார். இந்நிலையில் தமுஎகச இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டை ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் நடத்த உள்ளது. இந்த மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று (ஜூலை 2) சென்னையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா பேசுகையில், “சனாதனம் முழு மையாக அமலாகி இருந்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்திருக்கவே முடி யாது. அவருடைய வயதுக்கு சந்நி யாசம் சென்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக ஆளுநர் பேசி வருகிறார். சனாதனத்தின் அடிப்படையில் சமூகத்தை மறு கட்டமைப்பு செய்ய, பாகுபாட்டை நிலைநிறுத்த முயற்சிக் கின்றனர். சனாதனம் எனும் கருத்தி யல் பண்பாட்டு தளத்தில் காலூன்றி  நிற்கிறது. அதற்கெதிரான போராட்டங் களை முன்னெடுப்பதற்காக நடை பெறுகிறது என்றார்.

எழிலன் எம்எல்ஏ

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பி னர் மருத்துவர் எழிலன் நாகநாதன் குறிப்பிடுகையில், “ஆளுநர் குறிப்பிடு வது போன்று அனைவரையும் உள்ள டக்கியது சனாதனம் என்றால், எதற்காக இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் மதத்தை வைத்து அரசி யல் செய்ய முடியாது என்பதால், சாதி சங்கங்களை ஊக்குவித்து ஆர்எஸ்எஸ் (சனாதன) கொள்கையை புகுத்தி, மக்களை அணி திரட்டுகின்றனர். அரசியல் சூழல் மாறலாம். சமூக இயக்கங்களால்தான் தொடர்ந்து எந்தச் சூழலிலும் இயங்க முடியும். சமூக இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும். குறிக்கோளில் இருந்து திசைதிருப்பும் யுத்தியை முறியடிக்க இளைஞர்களையும், பெண்களையும் கருத்தியல் ரீதியாக அணி திரட்ட வேண்டும். அதனை இணைந்து செய்வோம்” என்றார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சைதை ஜெ. தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில், மூத்த தலை வர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், எஸ்.ஏ. பெருமாள், மாநில நிர்வாகிகள் கா.பிரக தீஸ்வரன், களப்பிரன், மயிலை பாலு, கி.அன்பரசன், பிரளயன், மலர்விழி மற்றும் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலை வர் வா.ரங்கநாதன், அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார், யூடியூபர்கள் மைனர், ஜீவசகாப்தன் உள்ளிட்டோர் பேசினர்.

வரவேற்புக்குழு

வரவேற்புக் குழுத் தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி, செயலாள ராக கா.பிரகதீஸ்வரன், பொருளா ளராக சைதை ஜெ. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழு வில் மருத்துவர் எழிலன் நாக நாதன், இயக்குநர் கரு.பழனியப்பன், கவிஞர் யுகபாரதி, தமிழ்நாடு சிறு பான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வழக்கறிஞர் அருள் மொழி உள்ளிட்ட ஏராளமானோர் இடம் பெற்றுள்ளனர்.

 

;