tamilnadu

img

மின்சார திருத்த மசோதாவை முற்றாக ரத்து செய்க!

விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாநிலத் தலைவராக பெ.சண்முகம், பொதுச்செயலாளராக  சாமி.நடராஜன், மாநில பொருளாளராக கே.பி. பெரு மாள், மாநில  துணைத் தலைவர் களாக வி.சுப்ரமணியன், டி.ரவீந்தி ரன், கே.முகமது அலி,  எம்.முத்து ராமு, பி.டில்லிபாபு, ஏ.வி.ஸ்டாலின் மணி, எஸ்.ஆர்.மதுசூதனன், மாநில துணைச்செயலாளர்களாக ஏ.விஜயமுருகன், த.கண்ணன், பி.துளசிநாராயணன், பி.பெருமாள், எஸ்.துரைராஜ், இரா.சரவணன், கே.நேரு ஆகிய புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட 87பேர் கொண்ட மாநிலக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்து வாழ்த்தி அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா நிறைவுரையாற்றினார். இறுதியாக மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளரும் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான வி.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

நினைவரங்கம், செப்.19- விவசாயத்தை அழிக்கும் ஆபத்து கொண்ட ஒன்றிய பாஜக அரசின் மின்சார திருத்த மசோதா வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியது.  நாகப்பட்டினத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாட்டின் 3 ஆவது நாள்(திங்கள்) அமர்வில் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பிறகு  மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், சிபிஎம் மாநில செயலாளரு மான  கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத்தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன், அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் உரை யாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள்  சங்க  பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தொகுப்புரையாற்றி னார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்திக்கு பேரு தவியாக இருக்கிற 21 லட்சம் மின் மோட்டார் களுக்கும் அரசால் விலையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. குடியிருப்புகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரமும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு விலையில்லா மின்சாரமும், கைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய ஒன்றிய அரசு  சட்டத் திருத்தங்கள் மூலம் மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா லாபமே குறிக்கோளாக கொண்டது. பெரு முதலாளிகள் அனைத்து சலு கைகளையும் ரத்து செய்துவிட்டு மின் கட்ட ணத்தை கண்மூடித்தனமாக உயர்த்தி விடு வார்கள். மக்களுக்கான மின்சார உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும். கோயில், மடம், அறக்கட்டளை இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர் களுக்கும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் அறநிலைய சட்டப் பிரிவு 34-ன் படி பட்டா வழங்கிட வேண்டும்;

வழங்கிட வேண்டும்; காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களான மீத்தேன், ஷேல் கேஸ், டைட் கேஸ்,ஹைட்ரோகார்பன் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுகளை எடுக்க அரசு அனுமதிக்கக் கூடாது; கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் பாஜக அரசின் அடாவடித்தனத்தை நிறுத்திட வேண்டும்; பிரதம மந்திரி விவசாயி கள் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற முறை கேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தமிழக அரசு வெளி யிட வேண்டும்; கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வன உரிமைச் சட்டம் 2006-க்கு எதிரானது; அதை செல்லாததாக்கி மேய்ச்சல் உரிமையை பாதுகாக்க தலையிட வேண்டும்; பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும்; தேங்காய் விலை வீழ்ச்சியால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ள தென்னை விவசாயிகளிடம் அரசு நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்திட வேண்டும்;

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்; விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சாலையோரம் கேபிள் மூலம் அமைத்திடவும்,  அமல்படுத்தப்பட்ட இடங்களில் 2003 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையிலும் கூடுதல் இழப்பீடு வழங்கிடவும் வேண்டும்;  2006  வன உரிமைச் சட்டத்தினை விரைந்து செயல் படுத்தி நில உரிமை பட்டா வழங்கிட வேண்டும்; கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கி வேண்டும்; மேலும் எட்டு வழிச் சாலை திட்டத்தை  கைவிடவும்,தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தி புனர மைப்பு செய்திடவும், தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து பழங்குடியினர் பிரிவு மக்களுக்கும் இனச் சான்றிதழ் விரைந்து வழங்கிடவும், தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி பிரிவுகளை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள்   மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
 

;