சென்னை, ஜூன் 13- எழுத்தாளர் ருச்சி பிரீதம் எழு திய “தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு” “Ancidnt Jain Legacy of Tamil Nadu” என்ற நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழ னன்று (ஜூன் 13) வெளியிட்டார். இந்நூலில், சந்தியா பதிப்ப கத்தின் உரிமையாளர் நட்ராஜன், டி.ஆர்.ஏ. நிறுவனத்தின் இயக்கு நர் தாமன் பிரகாஷ் ரத்தோட், ரஞ்சித் ரத்தோட், சுதீர் லோடா ஆகி யோர் உடனிருந்தனர். தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கம், தமிழ்நாட்டின் அடையா ளத்தில் சமண மதத்தின் ஒருங்கி ணைந்த பங்கு ஆகியவை இந்த நூலில் எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் கலை, கட்ட டக்கலை மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களும், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவமும் எடுத்து ரைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வள மான பாரம்பரியத்திற்கும் இடை யிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கும் சான்று ரைப்பதாக உள்ளது. எழுத்தாளர் ருச்சி பிரீதம், தமிழ் நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் அவர் களின் மனைவி என்பது குறிப்பி டத்தக்கது.