tamilnadu

img

த.தமிழ்ச்செல்வன் தந்தை காலமானார்

த.தமிழ்ச்செல்வன் தந்தை காலமானார்  

சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

புதுச்சேரி, மே 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் தந்தை பொ.தர்மலிங்கம் வெள்ளிக்கிழமை (மே30) காலமானார். அவருக்கு வயது 95. புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் குருவிநத்தம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள், பிரபுராஜ், சீனுவாசன், பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன், மாநிலக் குழு  உறுப்பினர் கலியன் உள்ளிட்ட திரளானோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சோரி யங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகில் உளள இடு காட்டில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.