tamilnadu

img

பல்கலை. துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிப்பதற்கு மாணவர் சங்க அகில இந்திய மாநாடு எதிர்ப்பு

சென்னை,டிச.20- பல்கலைக்கழக துணைவேந்தர் களை மாநில ஆளுநர்கள் நியமனம் செய்வதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் 17 ஆவது அகில இந்திய மாநாடு எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் 17 ஆவது அகில இந்திய மாநாடு  தெலுங்கானா மாநிலத் தலைநகரம் ஹைதராபாத்தில் உள்ள  உஸ்மா னியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தேசிய தேர்வு  முகமை மற்றும் மத்திய பல்கலைக் கழக தேர்வான கியூட் (CUET) தேர்வுக்கு எதிராகவும், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில ஆளுநர்கள் நியமிப்பதற்கு எதிராகவும்  தேசிய  கல்விக் கொள்கை- 2020 மற்றும் ஒரு மொழி திணிப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்கு தலைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டும். கல்வி நிலைய ஜனநாயகத்தை பாது காக்க வேண்டும் என்று வலியுறுத்தி யும் மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் என்பன உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக வி.பி சானு, பொதுச்செயலாளராக மயூக் பிஸ்வாஸ் உட்பட 83 பேர் கொண்ட மத்தியக்குழுவும்  21 பேர் கொண்ட அகில இந்திய நிர்வாகக்குழுவும் தேர்வுசெய்யப்பட்டன.   தமிழகத்திலிருந்து, மத்திய நிர்வாகக்குழுவிற்கு க.நிருபன் சக்கரவர்த்தி ( மாநிலச் செயலாளர்), மத்தியக்குழுவிற்கு கோ.அரவிந்தசாமி (மாநிலத் தலைவர்) மற்றும் க.பிருந்தா, ம.மிருதுளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.