tamilnadu

img

ஊதிய பேச்சுவார்த்தையை விரைந்து நடத்துக! கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை, அக். 9 - மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்குமாறு நிர்வாகத்தை வங்கி ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தி உள்ளது. கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னத்தின் 8வது மாநில மாநாடு அக்.8-9 தேதி களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில, மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும். மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பு முறையை இரண்டடுக்காக மாற்ற வேண்டும். நகர மற்றும் பணியாளர் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக மாற்ற வேண்டும், கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.  நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் தலைவர் தி.தமிழரசு பேசினார். உதவித்தலைவர் எம்.ராஜகேசி நன்றி கூறினார் மாநாட்டில் சங்கத்தின் கவுரவத் தலைவராக அ.சவுந்தரராசன், தலைவராக தி.தமிழரசு, பொதுச் செயலாளராக இ.சர்வே சன், பொருளாளராக வி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.