tamilnadu

img

3 லட்சம் பேர் கலந்துகொண்ட “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வு

புதுக்கோட்டை, ஜூலை 6-   புதுக்கோட்டையில் நடைபெறும் ஆறாவது புத்தகத் திருவிழாவை முன் னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி யில் மூன்று லட்சத்திற்கும் அதிகமா னோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வரும் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம்  தேதி வரை நடத்தவுள்ளது. இத்திரு விழாவையொட்டி நடைபெற்ற ‘புதுக் கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் ஒரே  நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிக மானோர் பங்கேற்றுச் சாதனை படைத்  துள்ளனர். வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்  குத் தொடங்கி 12 மணி வரை புதுக் கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மாவட்டம் முழுவதும்  உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி களின் மாணவ, மாணவிகள், நூலக வாசகர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதி நிதிகள், சுய உதவிக்குழுப் பெண்கள், அரசு அலுவலக ஊழியர்கள் என பல் வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை ராணியார் அரசு மக ளிர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவருமான ஐ.சா. மெர்சி ரம்யா மாணவிகளுடன் அமர்ந்து ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தார்.  ஆட்சியருடன் மாவட்ட ஆதி திரா விடர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவ குமார், புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, அ.மணவாளன், ஆர்.ராஜ் குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன், மா.வீர முத்து, ராசி.பன்னீர்செல்வம், கே.சதா சிவம், டி.விமலா, பவுனம்மாள், பள்ளி யின் தலைமை ஆசிரியர் தமிழரசி உள்  ளிட்டோரும் பங்கேற்றனர்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ

கீரனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு  நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.பரிமளம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், எழுத்தாளர் நா. முத்துநிலவன், கல்லூரி முதல்வர் ம. அன்புச்செழியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்  நிலைப் பள்ளியில் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் நூல களை வாசித்தனர். கலைஞர் கருணாநிதி அரசு மக ளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்  வாசகர் பேரவை செயலர் பேரா.சா. விஸ்வநாதன் கலந்து கொண்டார். அறந்தாங்கி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், வரு வாய்க் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெய பால், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சண்  முகம், முருகேசன், கவிஞர் ஜீவி,  தலைமை ஆசிரியர் சேகர் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர். ஆலங்குடியை அடுத்த கீழாத்தூ ரில் நூறு நாள் வேலைத் திட்டப் பணி யாளர்கள் சுமார் 50 பேர் தங்களின் பணித் தளத்திலேயே அமர்ந்து நூல்களை வாசித்தனர். மாவட்டம் முழுவதும் பல நூற்  றுக்கணக்கான இடங்களில் நடை பெற்ற வாசிப்பு இயக்கத்தில் மூன்று  லட்சத்திற்கும் அதிகமானோர் புத்த கங்களை வாசித்தனர்.