சிவகங்கை, ஜன.28- சிவகங்கை மாவட்ட நிர் வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் -பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடைபெறும் சிவ கங்கை மாவட்ட இரண்டா வது புத்தகத் திருவிழா சிவ கங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜனவரி 27அன்று துவங்கியது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப் பன் தொடங்கி வைத்தார். கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. 120 புத்தகக் அரங்கு கள் உள்ளன. சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி, பபாசி தலைவர் வைரவன், சிவகங்கை நகர் மன்ற தலை வர் துரை ஆனந்த், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து ,திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் புத்தக கண்காட்சி அரங்கு களை பார்வையிட்டனர். கீழடி உள்ளிட்ட தமிழ கத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மைய கண்காட்சி இடம்பெற்றுள்ளது. எண் ணும் எழுத்தும் என்கிற மாண வர்களுக்கான செயல் வடிவ கூற்று மற்றும் கோள் அரங் கம் இடம்பெற்றுள்ளன. புத்தக திருவிழாவிற்கு வருகிறவர்கள் அவர்களு டைய பெயர்களை பதிவிடு கின்றனர். இதில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப் படும் 20 நபர்களுக்கு புத்த கங்கள் வாங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.