குற்றவாளிகள் மீது வழக்கு பதியாமல் போராடுபவர்கள் மீது வழக்கு போடுவதா?
தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரி வான மனு தயார் செய்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். இந்த பிரச்சனை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அரசு ஒரு புறம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக சமூகமும் விழிப்பு ணர்வோடு செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது. திண்டுக்கல் சுரபி கல்லூரி பாலியல் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே டிஜிபியிடம் மனுக்கொடுத்துள்ளோம். இதில் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் முதல்வரிடம் பேச உள் ளோம். இவ்வளவு பெரிய கல்லூரியை நடத்தி பாலியல் பிரச்சனை எழுந் துள்ள நிலையில் அந்த தாளாளர் மீது தான் நியாயமாக காவல்துறைக்கு கோபம் வர வேண்டும். அந்த தாளா ளர் மீது மென்மையான நடவடிக்கை எடுத்துவிட்டு, இதுபற்றி நீதிகேட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு போடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
திண்டுக்கல், டிச.23- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதலை ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடி னார். இதுகுறித்து திண்டுக்கல்லில் வியாழனன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியிருப்ப தாவது: இதற்குப் பெயர் தேர்தல் சீர்திருத்தமா? தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் நடை பெற்றுள்ளன. தேர்தல் சீர்திருத்தம் முறையாக நடத்தப்பட வேண்டும்.
தேர் தல் காலத்தில் பண ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் செல்வாக்கு செலுத் தும் நிலைமை மிகவும் மோசமாகி வரு கிறது. பணம் படைத்தவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க முடியும்; பணம் படைத்த கட்சிகள் மட்டும் தான் தேர் தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளிடம் எலக்ட்ரோல் பாண்டு எனப்படுகிற தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் சேவகம் செய்வார்கள். இது உட்பட தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. அதே போல விகி தாச்சார பிரதிநிதித்துவ முறையை அம லாக்க வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். ஒருவர் 52 ஆயிரம் ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறார் இன்னொ ருவர் 50 ஆயிரம் ஓட்டு வாங்கி தோற்று விடுகிறார். இது என்ன ஜனநாயக முறை? எனவே விகிதாச்சார பிரதிநிதித் துவ முறை இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதை யெல்லாம் விட்டுவிட்டு அவசர அவசர மாக ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை சேர்ப்பது என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் தேர்தல் சீர்திருத்தம் என்று நிறை வேற்றியிருக்கிறார்கள். அதுவும் கூட விவாதிக்கப்படவில்லை. ஒரு மசோதா தாக்கல் செய்தால் அதற்கு திருத்தம் செய்ய உரிமை இருக்கிறது. திருத்தங்கள் செய்யப் படாமல் இந்த மசோதா நிறைவேற்றம் என்பது முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமாகும்.
மதுரை விமான நிலையம்
மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் இந்திய விமா னத்துறை அமைச்சரைச் சந்தித்து மதுரை விமான நிலையத்தை சர்வ தேச விமான நிலையமாக மாற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இருந்து தான் தமிழர்கள் உலகம் முழுவதும் செல்கிறார்கள். அப்படி மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டால் மதுரை விமான பயணிகள் வெளி நாடுகளுக்கு செல்ல திருச்சி, சென்னை, கோவைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 3 சர்வ தேச விமான நிலையங்கள் உள்ளன. வடநாட்டில் 2 தான் உள்ளது என்கிறார் விமானத்துறை அமைச்சர். இங்கே எவ்வளவு பயணிகள் சர்வதேச அள வில் பயணம் செய்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து ஒரு கோரிக்கை வைத்தாலே அதை ஒன் றிய பாஜக அரசு பாரபட்சமாக பார்க்கி றது என்பதற்கு இந்த கோரிக்கை ஒரு உதாரணம். சமீபத்தில் கூட உத்தரப் பிரதேசத்தில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை மோடி அறிவித்துள் ளார். ஏன் மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக்கூடாது. இதில் அரசுக்கு என்ன இழப்பு ஏற்படு கிறது?
இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. வரிப்பணம் என் றால் தமிழ்நாட்டு பணம் வேண்டும். ஜி.எஸ்.டி என்றால் தமிழ்நாட்டு பணம் வேண்டும். ஆனால் கோரிக்கை வைத் தால் மோடி கவனிக்கமாட்டார். சமீபத்தில் வெள்ள நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்திப்பது நாடாளு மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மத்திய நிபுணர் குழு பார்வையிட்டுச் சென்றார்கள். ஆனால் இப்போது வரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வில்லை. இது நல்ல நடைமுறை இல்லை.
மீனவர் துயரம்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படு கிறார்கள். ஒரு வாரத்தில் 69 பேர் கைது செய்யப்படுகிறார்கள். குஜராத் மீன வர்கள் தாக்கப்பட்டால் மோடி உடனடி யாக பாகிஸ்தான் தூதுவரை அழைத்து பேசுகிறார். ஆனால் இங்கே மாதா மாதம், வாராவாரம் தமிழ்நாட்டு மீன வர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார் கள். இதை ஒன்றிய பாஜக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இது ஒன்றும் பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு பாரபட்சமாக பார்க்கிற போக்கு உள்ளது. அலங்காநல்லூர் அரசு சர்க்கரை ஆலை தென் மாவட்டத் திற்கே ஒரே ஒரு சர்க்கரை ஆலையாக உள்ளது. எனவே அந்த பகுதி விவசாயி களின் கோரிக்கையை ஏற்று முதல மைச்சர் தலையிட்டு ஆலையை புன ரமைக்க ரூ.10-கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.