tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் மதுரை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

மதுரை, ஏப்.10- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து செவ்வாயன்று மாலை மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தல் முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல விசேஷமானதும் ஆகும்.இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நீடிக்க வேண்டும். மதச்சார்பின்மை தொடரவேண்டும் என்பதற்கான தேர்தல். ஆட்சிப்பொறுப்பிலுள்ள பாஜக அரசியல் சட்டம் மீது விசுவாசமில்லாதது. அரசியல் சட்டத்தைசிதைத்தது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். மதுரையின் பாரம்பரியம் மிக்க மீனாட்சி யம்மன் நகரில் மக்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஒரு மக்கள் போராளி, சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எங்க ளோடு இணைந்து பணியாற்ற தில்லிக்கு அனுப்பிவையுங்கள்.


கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம்

ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் அனைத்துதரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு ஒன்றைமடங்கு விலை நிர்ணயம் செய்வோம் என்றார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாததால் விவசாயிகள் தற்கொலைதான் நடந்துள்ளது. ஐந்தாண்டில் பத்து கோடிப் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றார்கள். 50ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மைதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 52 சதவீதம் உள்ளனர். வேலை கிடைக்காததால்இவர்களது எதிர்காலம் கேள்விக்குறி யாகியுள்ளது. ஜிஎஸ்டியால் சிறு-குறு தொழில்கள் முடங்கிவிட்டது. செல்லா நோட்டு அறிவிப்பால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள். மோடியால் செல்வச் செழிப்போடு கார்ப்பரேட் முதலாளிகள் வாழ்ந்துவருகிறார்கள்.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்க மோடி அரசு எந்தளவிற்கு பணியாற்றியது என்பதை இந்து ஆங்கில ஏடு வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளதுமக்களின் வரிப்பணம் ரூ. 13 லட்சம் கோடியை கார்ப்பரேட் முதலாளிகள் கடனாகப் பெற்றுள்ளனர். பணம் பெற்றவர்களில் சிலர் நாட்டைவிட்டே ஓடிவிட்டனர். அதானி குழுமத்திடம் விமானநிலையங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன.


தனியாக வராத ஜேப்படிக்காரர்

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலைக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இதை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடியது. தற்போது நீதிமன்றம் எட்டுவழிச்சாலைக்கு தடை விதித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எட்டுவழிச்சாலை என்ற பெயரில் பாஜக-அதிமுக ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன்பெறவும். பொதுப்பணத்தை கொள்ளை யடிக்கவும் முயற்சித்தனர். அது முறியடிக்கப் பட்டுள்ளது.மக்களின் கேள்விகளுக்கு மோடி எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஒரு பக்கம் இந்தியா ஒளிர்கிறது என்கின்றனர். ஒளிரும் இந்தியாவில் பணக்காரர்களே உள்ளனர். மொத்த செல்வத்தில் 73 சதவீதத்தை ஒரு சதவீத பணக்காரர்கள் கையில் வைத்துள்ளனர். மற்றொரு புறத்தில் கோடிக்கணக்கான மக்கள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையையே பாஜக தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது. மோடி ஜேப்படிக்காரராக மாறி நம்முடைய பணத்தை கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார். ஜேப்படிக்காரர் எப்போதும் தனியாக வரமாட்டார். துணைக்குஒருவரை வைத்துக்கொள்வார். தமிழகத்தில்அவருக்கு துணையாக இருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் கூட்டுக் களவாணிகளாக மாறி மக்களை கொள்ளை யடிக்க பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.


கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என அனைத்தின் மீதும் பாஜக அரசு தாக்குதல் நடத்திவருகிறது. பாஜகஆட்சியில் தான் நாடாளுமன்றம் மிகக்குறை வான நாட்கள் நடைபெற்றுள்ளன. நீதி பரிபாலனத்திற்கும் பாஜக இடையூறு செய்து வருவதாக சில நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பு பாஜக-வின் கைப்பாவையாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையமும் அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பதிவு செய்யப்படாத தொலைக் காட்சியான "நமோ" பிரதமரின் பேச்சுகள், தேர்தல் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. பிரதமர் ஒரு சிறந்த நடிகர். அவர்நடித்த படம் ஒன்றையும் "நமோ" தொலைக்காட்சி எடுத்துள்ளது. இந்தப் படத்தை வெளியிட தணிக்கைத்துறை அனுமதித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம், மதச்சார்பின்மை யை ஒழித்துக்கட்டி பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் கருத்துக்களைக் கொண்ட ஆட்சியை அமைக்க முயற்சி நடைபெறுகிறது.மற்றொரு புறத்தில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது. இதனால் சமூக அமைதி கெடுகிறது. குழந்தைகள் எப்படி உடை உடுத்த வேண்டும், எந்த வகையான உணவுகளை உண்ண வேண்டும். யாரோடு பழக வேண்டும் என்பது குறித்தெல்லாம் பாஜககட்டளையிடுகிறது. பசுவதை தடை என்ற பெயரில் முஸ்லிம்களும். தலித்துகளும் திட்டமிட்டு தாக்கப்பட்டனர்.


பயங்கரவாத தாக்குதல் அதிகரிப்பு

நாடு பாதுகாக்கப்பட, பயங்கரவாதம் ஒழிய பாஜக-வுக்கு வாக்களியுங்கள் என மோடி கூறுகிறார். பயங்கரவாதத்தை யாரும் ஆதரிப்பதில்லை. அதற்கு அனைவரும் எதிரானவர்கள்தான்.காஷ்மீர் மாநிலம் ஊரியில் தாக்குதல் நடைபெற்றபோது, பிரதமர் மோடி இனிமேல்தாக்குதல் நடக்காது என்றார். ஊரி தாக்கு தலைத் தொடர்ந்து புல்வாமா தாக்குதல் அதைத்தொடர்ந்து துல்லியத் தாக்குதல் நடை பெற்றுள்ளது.செவ்வாயன்று தந்தேவாடாவில் நக்சலை ட்டுகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் தடுப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். விஞ்ஞானிகளின் சாதனையை தமது சாதனையாகக் கூறி மோடி தமக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அவர்விண்வெளிக்கு வேண்டுமானால் காவலாளி யாக இருக்கட்டும். நாட்டை நாம் பாது காத்துக்கொள்வோம்.தம்மை தாமே காவல்காரனாக அறிவித்துக் கொண்ட மோடி ஐந்தாண்டுகளாக தூங்கி விட்டு "ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா" என்று இப்போது மக்களிடம் கதை சொல்கிறார்.


பாஜக-வை தோற்கடிப்பது மட்டும் போது மானதல்ல. மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசு அமைவதும் அவசியம். 2004-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அப்போது கலைஞர் இருந்தார். அவரது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றோம். இந்த அரசில் குறைந்த பட்சசெயல்திட்டம் உருவாக்கப்பட்டது. மாற்றுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், 100 நாள் வேலைத்திட்டம், வன உரிமை பாதுகாப்புச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன.தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணி வலுவான அணி. பொதுவாக ஊடகங்கள் நமக்குஎதிராகக் தான் இருக்கும். ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாமல் திமுக தலைமையிலான கூட்டணி 35 தொகுதி களில் வெற்றி பெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த அணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெறும்.நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அனைத்துத் தொகுதி களிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற இடைத் தேர்தலு க்குப்பின் தமிழகத்தில் இந்த ஆட்சி காணாமல் போகும். பின்னர் ஸ்டாலின் முக்கியப் பங்காற்றப்போகிறார்.மதுரை தொகுதியிலிருந்து சு.வெங்க டேசனை பெருவாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்து அவரை தில்லிக்கு அனுப்புங்கள்.இவ்வாறு சீத்தாரம் யெச்சூரி பேசினார்.அவரது ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.நூர்முகமது மொழியாக்கம் செய்தார்.

;