2026 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணி யில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட் சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா வின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார். “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும், 3 அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக நான் கருது கிறேன். மத்தியில் எந்த ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக் களிக்க வேண்டும். இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்க ளிக்க வேண்டும் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.