tamilnadu

img

ரூ. 5363 கோடியில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு

சென்னை, ஏப்.20- நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ரூபாய் 5363 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கான கொள்கை  விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் தா. மோ. அன்பரசன், “உலக வங்கியின் நிதி உதவி யுடன் நகர்ப்புற ஏழை குடும்பங்க ளுக்கு ரூ.5363 கோடியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியிடம் ரூபாய் 3,750 கோடி கடனுதவி பெறுவதற்கான செயல் திட்ட முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெவ்வேறு இரண்டு நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்படும்” என்றார்.

பின்னர் புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச்சர் கூறி யதாவது: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் சுமார் 29 ஏக்கரிலும்  கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி சுமார் 54  ஏக்கரிலும் புதிதாக தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்.  கோவிட்-19 பெருந்தோற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயனடையும் வகையில் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம் என்ற புதிய இத்திட்டத்திற்கு 50  கோடி நிதி ஒதுக்கப்படும் இது ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் வணிக வளாகம் மற்றும் ஏற்றுமதி வசதி மையங்கள் 10 கோடி செலவில் அமைக்கப்படும். வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி மற்றும் ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கான வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும்.

2022- 23ஆம் நிதி ஆண்டில் 100 தொழில் நிறுவனங்களுக்கு முடக்க உதவியுடன் 10 கோடி நிதி  உதவி வழங்கப்படும். குறு சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக ளுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப் படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். நடப்பு நிதியாண்டில் நில  உரிமை உள்ள பொருளாதாரத் தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின்  கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ. 2.10 லட்சம் மானியம் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன் பெறும் வகையில் இந்த நிதியாண் டில் 25,000 அடுக்கு மாடி குடியி ருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் 1200 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் மறு கட்டுமானம் செய்யப்படும் என்றும்  அமைச்சர் அறிவித்தார்.