“என்னிடம் பணம் இல்லாததால் நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.” - இது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது. ஏழைத்தாயின் மகன் டீக்கடையில் பணியாற்றி பிரதமர் ஆகியுள்ளார்! இரண்டு தகர டப்பாக்களோடு கோவைக்கு வந்து ஒருவர் தலைவராகி போட்டியிடுகிறார். நாட்டின் நிதியமைச்சரோ தன்னிடம் காசு இல்லை என்கிறார். ஆனால் 2022ல் மாநிலங்களவைத் தேர்தலில் அவர் சமர்ப்பித்த தரவுகளில் தனக்கு ரூ.1.8 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். 1.8 கோடி சொத்து என்பதே ஏழ்மை எனில், மாதம் வெறும் ரூ.5000 அல்லது ரூ.10000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கதி என்ன என்பதை நிதி அமைச்சர் யோசிப்பாரா?