சென்னை, மார்ச் 14- அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அன்பழகன் தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 13) நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் திவாகரன், சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், ஆறுமுக நயினார், மற்றும் சம்மேளன நிர்வாகிககள் ஆர்.லக்ஷ்மையா, ஏ.பி.அன்பழகன், பி.என். உண்ணி, ராமஷ்ரே யாதவ், ஏ.பி.அன்பழகன், மாநிலப் பொருளாளர் வி.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களிடம், ஆலை தொழிலாளர்களிடம் பிரசுரம், கையேடு விநியோகிப்பது, கேட் கூட்டங்கள் நடத்துவது, வணிகர்களையும், பொது மக்களையும் சந்தித்து ஆதரவு கோருவது, மார்ச் 28, 29 தேதிகளில் சாலை மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.