tamilnadu

img

ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர்

சென்னை,ஜூலை 9- வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநில அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதி யற்றவர்  என்று கூறி, குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  முதல்வர் அனுப்பிய கடிதத்தின் அம்சங்கள் வருமாறு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படை யாகத் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழக அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு முன்பு நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது  செயல்பாடுகள் திருப்திகரமாக அமைய வில்லை. உண்மையில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு தான் நாகாலாந்திற்கு ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ள தாக, நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி) தலைவர் கூறியுள்ளார். 

அரசுடன் அரசியல் போர் புரிகிறார்

இந்தப் பின்னணியில்தான், ஆர்.என்.ரவி  2021-செப்டம்பரில் தமிழக ஆளுநராக நிய மிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுடன் கருத்தி யல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வரு கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்

தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடு வதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும். ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது. இது அரசியலமைப்பிற்கு முரணானது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதி காரியாக இருக்க முடியாது. சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்ட முன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது. இது சட்டமுன்வடிவின் அவ சியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டமன்றத் தின் முழு உரிமைக்கு உட்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடி வுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து  விளக்கங்களையும் தமிழக அரசு அளித்துள் ளது. சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறை வேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்ப மாகக் கருதப்பட்டு, ஆளுநர் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இப் படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை  உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

குற்றவாளிகள் மீது வழக்குத்  தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் 

ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சிபிஐ கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்காக ஊழல் வழக்குகள் தொடர்பான பின்வரும் கோப்புகள் நிலுவையில் உள்ளன:

    பி.வி.ரமணா @ பி.வெங்கட்ரமணா - முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.

    டாக்டர் சி. விஜயபாஸ்கர் - முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.

    கே.சி. வீரமணி - முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – கோப்பு எண் AC/454/2021, நாள் 12.9.2022. n    எம்.ஆர்.விஜயபாஸ்கர் - முன்னாள் போக்கு வரத்துத் துறை அமைச்சர் –கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023.

தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக... 

ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது. ஒரு மாநில ஆளுந ராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டு மல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத் தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார். அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங் களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகம் சொர்க்கம் போன்றது. மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும்  பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது. கெடுவாய்ப்பாக, ஆர்.என். ரவி, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது  

பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்க மாக வெளிப்படுத்தி வருகிறார். ஆர்.என்.ரவி, விரும்பத்தகாத, பிளவு படுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொது வெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது. 9-11-2022 அன்று ஆர்.என். ரவி, “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளி யிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவ மதிக்கும் செயலாகும். இந்தியா, அதன் அரசி யலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ள தையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்ப தை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள். இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்ட மைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது.  13.06.2022 அன்று ஆர்.என்.ரவி சனாதன தர்ம த்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தின மான ‘திருக்குறளை’ வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப்  பெருமையையும் கண்டிப்பது போன்ற  வகுப்புவாதக் கருத்துக்களை தெரிவித்திருக் கிறார். இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள்

ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது. ஒரு மாநில ஆளுந ராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டு மல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத் தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார். அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங் களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகம் சொர்க்கம் போன்றது. மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும்  பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது. கெடுவாய்ப்பாக, ஆர்.என். ரவி, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது  பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்க மாக வெளிப்படுத்தி வருகிறார். ஆர்.என்.ரவி, விரும்பத்தகாத, பிளவு படுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொது வெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது. 9-11-2022 அன்று ஆர்.என். ரவி, “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளி யிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவ மதிக்கும் செயலாகும். இந்தியா, அதன் அரசி யலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ள தையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்ப தை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள். இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்ட மைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது.  13.06.2022 அன்று ஆர்.என்.ரவி சனாதன தர்ம த்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தின மான ‘திருக்குறளை’ வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப்  பெருமையையும் கண்டிப்பது போன்ற  வகுப்புவாதக் கருத்துக்களை தெரிவித்திருக் கிறார். இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள்

தமிழ் இலக்கியத்தை இழிவுப் படுத்தியவர்

க்களுக்கு மோசமாக போதிக்கப் பட்டுள்ளது” எனத் தெரிவித்து தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற அவரது அறிக்கைகள் அர சியலமைப்பை அவமதிக்கும் வகை யில் உள்ளன. அவரது இதுபோன்ற  செயல்கள், இந்திய அரசமைப்பின்  156 (1)-ஆவது பிரிவின்கீழ், அரசி யலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியுள்ள தையே காட்டுகிறது. மேற்கூறியவற்றைத் தவிர, ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்  சங்களில் நிலைத்திருக்கும் “தமிழ் நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று  பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று  ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் தெரிவித்தார். ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டின் மீது அவ ருக்குள்ள அதீத வெறுப்பை காட்டுவ தாக அமைந்துள்ளது. ஆர்.என். ரவி தமிழர்களின் நல னுக்கு எதிரானவர் என்பதும், தமிழ்நாடு,  தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகிய வற்றின் மீது விவரிக்கமுடியாத, ஆழ மாக வேரூன்றிய பகைமை கொண்ட வர் என்பதும் தெளிவாகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி மேலே விவரிக்கப்பட்ட சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என்பதையே காட்டுகிறது

சட்டமன்ற சம்பவம்

9-1-2023 அன்று, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்திய போது ஆர்.என். ரவியின் எதேச்சதி காரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரிவு 163(1)-இன்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தனது கட மைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் தன்னிச்சையாகவோ, தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவோ செயல்பட முடியாது. இருப்பினும், 9-1-2023 அன்று, ஆர்.என்.ரவி, அரசிய லமைப்புச் சட்டத்தின்கீழ், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ் நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023  அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப்  பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்தார். இதன்மூலம், அவருடைய அரசியல் நோக்கம் தெளி வாகத் தெரிந்தது. வரைவு உரையில் குறிப்பிடப்பட்டி ருந்த ‘சமூகநீதி’, ‘சுயமரியாதை’, ‘அனைவருக்குமான வளர்ச்சி’, ‘சமத்துவம்’, ‘பெண்ணுரிமை’, ‘மத நல்லிணக்கம்’, ‘மனிதநேயம்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ போன்ற சொற்  களை அவர் வாசிக்காமல் புறக்க ணித்தார். ஒருவேளை இவற்றில் எல்லாம் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் அவற்றைப்  புறக்கணித்திருக்கலாம். அதோடு,  ‘தந்தை பெரியார்’, ‘அம்பேத்கர்’, ‘பெருந்தலைவர் காமராஜர்’, ‘பேரறி ஞர் அண்ணா’, ‘கருணாநிதி’ போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பி டுவதையும் ஆளுநர் தவிர்த்தார். இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள் ளாக்கி உள்ளார். இந்தியாவின் இத்த கைய மகத்தான தலைவர்களின் பெயர்  களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமி ழக மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த  நாட்டையும் அவமதிக்கும் செயலாகும்.  அதோடு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வரைவு உரைக்கு ஆளு நர் ஒப்புதல் அளித்த நிலையில்கூட, இதுபோன்ற வாக்கியங்களைப் படிக்  காமல் தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது.

மலிவான அரசியல் செய்கிறார்

இது ஒருபுறமிருக்க, பொதுவெளி யில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழ கத்தை மேம்படுத்தவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு நான் பய ணம் மேற்கொண்டிருந்தபோது, ஆளு நர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டுப் பய ணங்களால் முதலீடுகள் வருவதில்லை  என்று சீண்டுவதுபோல குறிப்பிட்  டார். ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணிய மான ஆளுநராகச் செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்  வம் கொண்டவர் என்பது தெளிவாகி யுள்ளது.

குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்

இவை தவிர, கிரிமினல் குற்றங்கள்  குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதார மற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். 2022ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்  களுக்கு இடையில், சிதம்பரம் நட ராஜர் கோயிலைச் சார்ந்த இரண்டு  தீட்சிதர்கள், குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. இது தொடர் பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது  செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மே 4ம் தேதி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குப் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என். ரவி,  சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்  கும் நோக்கில் நடராஜர் கோயில்  தீட்சிதர்கள் மீது மாநில அரசின் சமூக  நலத்துறை 8 பொய்யான புகார் களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறி யுள்ளார்.

மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநரின் இத்த கைய அறிக்கை, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது. இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பின்னர், சிறுமிகளின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணை யத்தில் வெளியாகி, ஆர்.என்.ரவி  தனது பேட்டியில் கூறிய கருத்துகள்  பொய்யானவை என்பது தெரியவந்  தது. தீட்சிதர்களின் மகள்களான 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகளை  வலுக்கட்டாயமாக மருத்துவப் பரி சோதனைக்கு அழைத்துச் சென்று அரசு மருத்துவர்கள், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு உட்  படுத்தியதாகவும், இதன் காரணமாக சில பெண் குழந்தைகள் தற்கொ லைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கள் தவறானவை என்று பின்னர் கண்டறியப்பட்டன. இதுபோன்ற கருத்துக்களை குற்ற வியல் விசாரணைக்கு இடையூறாக வும், சாட்சியங்களைச் சிதைக்கும் வகையிலும் ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது  உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், காவல்  துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள். குழந்தைத் திரு மணம் என்ற கொடிய குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கருத்துத் தெரிவிப்பதை நல்ல மன சாட்சி உள்ள யாராலும் அனுமதிக்க முடியாது.


 

 

;