தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 32 இடங்களில் போராட்டம்
சென்னை, ஜூலை 25 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் செவ் வாயன்று 32 இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களை நடத்தினர். காவிரிப் பாசன மாவட்டங் களில் சாகுபடி செய்யப் பட்டுள்ள குறுவைப் பயிரை காப்பாற்ற காவிரியில் ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நா டக அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இதில் ஜுன் மாதம் முதல் ஜூலை முதல் வாரம் வரை மட்டும் சுமார் 10 டிஎம்சி அளவிற்கான தண்ணீரை வழங்காமல் பாக்கி வைத்திருந்தது. இதனால் காவிரி பாசன பகுதிகளில் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை உருவாகியுள்ளது. இதன் மீது காவிரி நதிநீர் ஆணை யம் நடவடிக்கை எடுத்து தமி ழகத்திற்குரிய பங்கை பெற்றுத் தர வேண்டும் என்றும், மேகதாது பகுதி களில் அணைகட்டும் கர்நா டக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மழை காரண மாக உபரி நீர் திறக்கப்பட்டா லும் முழுமையான பங்குத் தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்துவிட வில்லை.
இந்நிலையிலேயே காவி ரியில் தமிழகத்திற்குரிய பங்குத் தண்ணீரை முழு மையாக உடனே திறந்து விட வேண்டும்; இதற்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் பங்கேற்று உரையாற்றினார். நாகப் பட்டினத்தில் மாநிலப் பொரு ளாளர் கே.பி. பெருமாள், திருவரம்பூரில் மாநில துணைத்தலைவர் கே. முகமது அலி, கீழையூரில் மாநிலத் துணைத் தலைவர் வி. சுப்ரமணியன், மயிலாடு துறையில் மாநிலச் செய லாளர் எஸ். துரைராஜ், திரு வாரூரில் எம். சேகர், தஞ்சை யில் என்.வி. கண்ணன், கும்ப கோணத்தில் பி. செந்தில் குமார் ஆகியோர் ஆர்ப்பாட் டங்களில் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் 8 மையங்களிலும், திருவாரூ ரில் 11 மையங்கள், நாகை யில் 5 மையங்கள், மயிலாடு துறையில் 4 மையங்கள், புதுக் கோட்டையில் 2 மையங்கள் மற்றும் அரியலூர், திருச்சி என மொத்தம் 32 மையங் களில் நடைபெற்ற போராட்ட ங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.