ஒழுங்குபடுத்துவது அவசியம்
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் வலியுறுத்தி உள்ளார். சென்னை பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்க ளிப்பு குறித்தும் பேசினார்.
அரசு மருத்துவர்கள் சாதனை
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தச்சு வேலையின்போது துண்டான 29 வயது இளைஞரின் இடது கை மணிக்கட்டு பகுதியை 8 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்தனர்.
மே 4-இல் நீட் தேர்வு
சென்னை: மே 4 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்.7 முதல் மார்ச் 7 வரை நடைபெறுகிறது. கட்டணமாக பொதுப்பிரி வினருக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரம்: மதியம் 2-5 மணி வரை, தேர்வு முடிவு கள் ஜூன் 14 அன்று வெளியிடப்படும். தேர்வு மைய விவ ரங்கள் குறித்த அறிவிப்பு ஏப்.26 இல் வெளியாகும்.
இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
அரக்கோணம்: 17 வயது சிறுமி மீதான கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு முக்கிய குற்றவாளி களான ஜானகிராமன், மூர்த்தி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராத மும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கிலிருந்து மற்ற 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அம்மா மருந்தகங்கள் மூடப்படாது
! சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருச்சியில் அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால், அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோ தும் மூடப்படாது” என தெரிவித்தார்.
சிறப்பு ரயில் சேவைகள் ரத்து
சென்னை: நடைமுறை காரணங்களால் தாம்பரம் - நாகர்கோவில், கொச்சுவேலி இடையேயான சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதில், நாகர்கோவில் - தாம்பரம் வழித் தடத்தில் (06012) ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் குறிப்பிட்ட தேதிகளில் ரயில்கள் ரத்தாகின்றன. தாம்பரம் - கொச்சு வேலி ஏசி சிறப்பு ரயில் சேவையும் (06035, 06036) இரு திசை களிலும் குறிப்பிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக சென்னை கடற்கரை - திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மெமு ரயில் சேவைகளும் ரத்தாகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
சென்னை: தமிழ்நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. மலேசி யாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற முக்கியப் பங்காற்றிய தமிழக வீராங்கனை கு.கமாலினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கமாலினி ஏழு போட்டி களில் ஒரு அரைசதம் உட்பட 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் ஆகிய சாதனைகளை நிகழ்த்தினார். அதேபோல், தில்லியில் நடந்த முதல் கோ-கோ உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற உதவிய தமிழக வீரர் சுப்பிரமணிக்கும் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப் படவுள்ளது. மேலும், கஜகஸ்தானில் நடைபெறவுள்ள ஜூனி யர் உலக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழக வீராங்கனை பிளெஸ்ஸிசா சங்மா மற்றும் வீரர் ப.அர விந்தன் ஆகியோருக்கு தலா ரூ.3.15 லட்சம் செலவினத் தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
காட்டு யானை தாக்குதல் நீலகிரி:
பந்தலூர் குரூஸ் மலைப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற காந்திமதி மற்றும் கணேசன் ஆகிய இருவரை காட்டு யானை தாக்கியது. காந்திமதிக்கு தொடை யில் பலத்த காயமும், கணேசனுக்கு உடல் முழுவதும் காய மும் ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் இருவரையும் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ மனைக்கு மாற்றினர்.