நாகர்கோவில், செப்.6- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். தனது பாதயாத் திரையை புதனன்று (செப்.7) கன்னி யாகுமரியிலிருந்து தொடங்குகிறார். குமரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரம் 4 நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை செய்கிறார். ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்வதையடுத்து பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டுள்ளது. ராகுல் காந்திக்கு ஏற்கனவே ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப் பட்டு வருகிறது. இதனால் அவர் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்களில் பாதுகாப்பை பலப் படுத்த காவல்துறையினர் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளனர். ஐ.ஜி. மற்றும் ஏ.டி.ஜி.பி.கள் அங்கேயே முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மேலும், தில்லியில் இருந்தும் பாது காப்பு அதிகாரிகள் கன்னியா குமரிக்கு வருகை தந்துள்ளனர். கன்னியாகுமரி முதல் களியக்கா விளை வரை முக்கிய சந்திப்புகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. ராகுல் காந்தி பாதயாத் திரை மேற்கொள்ளும் போது 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 2500 காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து காவலர் கள் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள னர்.