ஈரோடு, டிச.16- மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலா ளராக ஆர்.ரகுராமன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 12 ஆம் மாநாடு புதனன்று ஈரோட்டில் துவங்கியது. கட்சியின் செங்கொடியினை மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.துரைராஜ் ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் அறிக்கையை முன்வைத்து பேசினார். தொடர்ந்து அறிக் கையின் மீது பிரதிநிதிகள் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து மாநாட்டின் இரண்டாம் நாளான வியா ழனன்று மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் வாழ்த் துரையாற்றினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
இதைத்தொடர்ந்து மாநாட்டில் மாவட்டச் செயலா ளராக ஆர்.ரகுராமன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக ப.மாரிமுத்து, சி.துரைசாமி ஏ.முனுசாமி, பி.பி.பழனிச்சாமி, ஜி.பழ னிச்சாமி, எஸ்.சுப்பிரமணி யன், ஆர்.கோமதி, கே.ஆர். விஜயராகவன், சி.பரமசிவம் சி.முருகேசன் ஆகியோர் உள்ளிட்ட 34 மாவட்டக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நிறைவுரையாற்றி னார். ஈரோடு தாலுகா செய லாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
நூல் வெளியீடு
முன்னதாக, வீ.பா.கணே சன் மொழி பெயர்ப்பில் ‘இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு பயணம்’ என்ற புத்தகத்தை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட கட்சியின் மூத்த உறுப்பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம் பெற்றுக் கொண்டார். மேலும், தீக்கதிர் நாளிதழ், செம்மலர், மார்க்சிஸ்ட் இதழ் களுக்கான ஆண்டு சந்தாக் களும் ஒப்படைக்கப்பட்டன.