tamilnadu

img

ஆர். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது

சிபிஎம் வாழ்த்து

சென்னை, ஆக.6- தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விரு துக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிபிஐ மூத்த தலை வர் தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரரு மான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கு வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தகைசால் தமிழர் விருது பெறவிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது  நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டு தல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த  விருதை வழங்கிடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி களில் ஒருவரும், நூற்றாண்டு கண்ட நாயகர்  தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு தகை சால் தமிழர் விருது வழங்கியதும், இந்தாண்டு தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமி ழக அரசு அறிவித்துள்ளதும், இந்திய நாடு  75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட விருக்கும் இத்தருணத்தில் இந்திய விடு தலை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்  றிய பங்கையும், தியாகத்தையும் போற்றுவ தாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆக.6- நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று 75-வது  சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. அந்த வகையில், சென்  னையில் ஆண்டுதோறும் நடை பெறும் சுதந்திர தின விழாவில் தமி ழக அரசு சார்பில் பல்வேறு விருது கள் வழங்கப்படுவது வழக்கம்.  அதன்படி, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது கடந் தாண்டு அறிமுகமானது. அந்த விருது முதல் முறையாக மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.  இந்த முறை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  ஆர். நல்லகண்ணு தகைசால் தமி ழர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த விருது சுதந்திர தின விழா வில் வழங்கப்பட உள்ளதாக தமி ழக அரசு தெரிவித்துள்ளது. சுதந் திர தின விழாவில் சிபிஐ தலைவர் நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி  கவுரவிக்க உள்ளார். 96 வயதா கும் நல்லகண்ணு மாணவப்பரு வத்திலேயே சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டவர் என் பது குறிப்பிடத்தக்கது.