திருத்தணி,டிச.14- மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் ்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகை யில்,“இந்த கடனுதவி திட்டத்தால் தமிழ்நாடு முழுக்க 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56, 142 பயனாளிகளுக்கு 2, 750 கோடி ரூபாயும், கடனுதவியும் நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும்” என்றார். ஒரு பெண், யார் தயவையும் எதிர் ்பார்த்துக் காத்திருக்காமல் சுயமாக நிற்பதற் ்கும் வாழ்வதற்கும் அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம் தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் என்றும் மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வரை ரூ. 6777 கோடி கடன் வழங்கப்பட் டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை ரூ. 10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கை எட்டிட உத்தரவிடப்பட்டுள்ளது. முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத் ்தவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். ரூ.10 முதல் 20 லட்சம் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந் ்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் 10 லட்சம் முதல் ஒன்றரைக்கோடி வரை கடன் பெறலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், மு.நாசர், மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் மு.அமுதா, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அதி காரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.