சுதந்திரப் போராட்ட வீரர் கே.முத்தையா 22 ஆவது நினைவு தின பொதுக்கூட்டம்
பேராவூரணி, ஜூன் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான கே.முத்தையா அவர்களின் 22 ஆவது நினைவு தினம் செவ்வாயன்று (ஜூன் 10) பேராவூரணியில் கடைப்பிடிக்கப் பட்டது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத் தின் ஸ்தாபக பொதுச் செயலாளராகவும், இலக்கிய விமர்சகராகவும், செம்மலர் ஆசிரி யராகவும் பல பரிமாணங்களில் பணியாற்றிய தோழர் கே.முத்தையா அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோ றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கட்சியின் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி ஒன்றியக் குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவு நாள் பொதுக்கூட்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது. ஒன்றியக் குழு செயலாளர் களான வி.ஆர்.கே.செந்தில்குமார் மற்றும் கே.ரெங்கசாமி ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை சிறப்புரை ஆற்றினார். மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன் மற்றும் ஆர்.சி.பழனிவேல் ஆகியோர் கே. முத்தையா அவர்களின் தியாக வாழ்வை நினைவுகூர்ந்து உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன் தனது உரையில், கே.முத்தையா அவர் களின் நினைவை போற்றியதுடன், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களைக் கடுமையாகக் கண்டித்தார். மக்க ளின் வாழ்வாதார கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், ஜூன் 11 முதல் 20 வரை நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தைத் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், எம்.செல்வம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகி யோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.