சென்னை, பிப்.19- மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர், “இன்சூரன்ஸ் ஒர்க்கர்” இதழின் மேலாளராகவும் செயலாற்றிய தோழர் கே.டேவிட் (வயது 88) மறைவு எய்தினார். மதுரை மாநகர தொழிற் சங்க கூட்ட மைப்பை உருவாக்குவதில் 1970களில் அரும் பணி ஆற்றியவர். அலுவலகப் பணி ஓய்வுக்கு பின்னர் தீக்கதிர் இதழின் ஆசி ரியர் குழுவில் இணைந்து செயலாற்றியவர். அவரது மறைவுச் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தோழர் கே.டேவிட் உடல் திங்களன்று (பிப்.19) வடபழனி ஏவிஎம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சுவாமிநாதன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஜே.குருமூர்த்தி, சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், பகுதி-2ன் தலைவர் மனோகரன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் நாகராஜ், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.வி.வேணு கோபாலன், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தீக்கதிர் சார்பில் செ.கவாஸ்கர், டேவிட் அவர்களின் மகன் பிரின்ஸ் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றி னார்கள்.