புதுதில்லி, டிச.3- பட்டியலினத்தவருக்காகவும் (எஸ்.சி.) பழங்குடியினருக்காகவும் (எஸ்.டி.) அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து அப்பிரிவைச் சார்ந்த மக்களிடமே போதிய விழிப்புணா்வு இருப்பதில்லை. எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு நாடும் சமூகமும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித் துள்ளார். எஸ்.சி., எஸ்.டி.,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு, அம்பேத்கா் வணிகக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தில்லியில் நடத்தப்பட்ட சா்வதேச அம்பேத்கா் மாநாட்டை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
அப்போது அவா் பேசுகையில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் சமூகம் மற்றும் பொருளாதாரம், நீதி தொடர்பான பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பரப்பு வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். இந்த மாநாடு அரசியலமைப்பு உரிமைகள் பிரச்சனையுடன் கல்வி, தொழில் முனைவு, புத்தாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் பாராட்டினார். சமூகத்தின் தார்மீக மனசாட்சியாக இருப்ப வர் டாக்டர் அம்பேத்கர். சட்டங்களால் மட்டும் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது, மக்கள் சமூகத்தில் தார்மீக பொறுப்பும் சமூக உணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.
அம்பேத்கர் வன்முறையற்ற மற்றும் அரசி யலமைப்பு வழிமுறைகளை வலியுறுத்தினார். சமூக அநீதி உள்ளிட்ட அனைத்து வகை யான சுரண்டல்களிலிருந்தும் எஸ்சி., எஸ்டி மக்களை பாதுகாக்குமாறு அரசியல மைப்பு வலியுறுத்துகிறது. இதனை நடை முறைப்படுத்துவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நம் நாடும், சமூகமும் அவர்களுக்குச் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. பட்டியலினத்தவருக்காகவும் (எஸ்.சி.) பழங்குடியினருக்காகவும் (எஸ்.டி.) அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்தும் அப்பிரிவைச் சார்ந்த மக்களுக்கு தெரியவில்லை. அவா்களுக்குப் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் இந்த மாநாட்டை நடத்தும் அமைப்புகளின் உறுப் பினா்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. வளா்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள பட்டியலினத்தவா்களையும் பழங்குடியின ரையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சியே டாக்டர் அம்பேத்கருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றார்.