tamilnadu

img

“நகரத்தை நோக்கி வரும் மக்களையும் உள்ளடக்கி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்”

வடசென்னை மாவட்ட வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை எப்படி நிறைவேற்ற வேண்டும், எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு முன்வைக்கிறோம்.  நகர்ப்புற மக்கள்  அதிகரிப்பு  தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறங் களில் மக்களின் எண்ணிக்கை நாளு க்குநாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில், 100  பேரில் 48 பேர் நகரத்தில் வசிக் கிறார்கள். தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் நகர்ப்புறத்தில் வசிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் சூழலில்  வாழ்வாதாரத்தை தேடி நகர்ப்புறத் தை நோக்கி மக்கள் வந்து கொண்டிரு க்கிறார்கள். எனவே  ஏற்கனவே வசிக்கும் மக்களுக்கான திட்டங்களை மட்டும் கொண்டு வந்தால்போதாது, நகரத்தை நோக்கி வரும் மக்களை யும் கணக்கில் எடுத்துதிட்டங்களை கொண்டு வரவேண்டும்.

சிபிஎம் கோரிக்கை ஏற்பு

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்த லை தற்போதைய திமுக அரசு நடத்தி முடித்தது. கிராமப்புறங்களில் ஆண்டுக்கு நான்குமுறை கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதைப் போல் நகர்ப்புறங்களிலும் நகர சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அரசிடம் வலியுறுத்தி னோம். இதையடுத்து நகர்ப்புறங் களில் வார்டு சபைக் கூட்டம் நடை பெறுகிறது.

ஒன்றிய அரசின் ஆபத்தான நிபந்தனைகள்

ஜுன் 19 அன்று மோடி அரசு அனைத்து மாநில தலைமைச் செய லாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மாநிலத்தில் குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்கவில்லை; மாறாக குப்பை அள்ளுவதற்கு வரி விதிக்க வேண்டும், சொத்து வரியை உயர்த்த வேண்டும், கழிவுநீரை அப்புறப்படுத்த இவ்வளவு வரி  விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள் ளது.  இவற்றையெல்லாம் மாநில அரசு  நிறைவேற்றவில்லை என்றால் ஒன்றிய அரசின் நிதியை வழங்க மாட்டோம் என்றும், நீண்டகால கடன்  கூட கிடைக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைத்து வரிகளையும் உயர்த்தி, இதுவரை எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மோடி அரசு கூறியுள்ளது. 

முதலாளிகளுக்கு  வரி விதிக்க தயாரா?

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கள் இருக்கும்போது, ஒன்றிய அரசு கட்டாயம் வரியை உயர்த்தி வசூ லியுங்கள் எனக் கூறுவது என்ன  நியாயம்? அனைத்து அதிகாரங்களை யும் ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. சாதாரண ஏழை-எளிய மக்களின் சொத்து வரியை, குப்பை வரியைக் கூட  உயர்த்த வேண்டும் எனக் கூறும்  மோடி அரசு, அம்பானி, அதானி உள் ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி விதிக்கத் தயாரா?

கல்வி உரிமையைப் பறிக்க சதி

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை கல்லூரிகள் தேவை யில்லை என்றும், கல்வி வளாகங் களை உருவாக்குங்கள் என்றும், தேவைப்படுபவர்கள் அங்கு வந்து கல்வி பயிலட்டும் என்றும் கூறுகிறது. அப்படியென்றால் கட்டாயக் கல்வி முறை ஒழிக்கப்படும். இந்தியாவில் அதிக கல்வி கற்ற மாநிலமாக கேரளா முதல் இடத்திலும், தமிழ் நாடு 2ஆவது இடத்திலும் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் அனைவருக்கு மான கல்வி என்பதை மோடி அரசு  ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் 59 லட்சம் குடும்பங்கள் குடிசை களில் வசிக்கின்றன. அங்கு எந்தவித மான அடிப்படைக் கட்டமைப்பு வசதி களும் கிடையாது. சிறையில் உள்ள  வசதி வாய்ப்புகள் கூட இந்த மக் களுக்கு இல்லை. அதற்காகத்தான் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். தற்போது ஒன்றிய அரசு அந்த திட்டத்தையே மாற்றி, பணம் கட்டினால்தான் வீடு என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ஒன்றிய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளையும், அனைத்து தரப்பு மக்களின் அடிப் படை உரிமைகளையும் படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால் ஒன்றிய மோடி அரசுக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியக் கடமையாக மாறியுள்ளது. எனவேதான் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படை யில் மகத்தான அணி உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த அணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வை நிச்சயம் வீழ்த்தும்.