tamilnadu

img

பிரசவத்தின்போது உயிரிழப்பு தாயை பறிகொடுத்து தவிக்கும் 4 குழந்தைகள்

நாகர்கோவில், ஜுலை 14- நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயை பறிகொடுத்த 4 குழந்தைகள் பரிதவித்து வரு கின்றன. உரிய நடவடிக்கை எடுப்ப துடன் அந்த ஏழைக் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகில் உள்ள தோப் பூரை சேர்ந்தவர் அப்பாதுரை. கூலித் தொழிலாளியான இவரது மனைவி சிவகாமி (36). இவர்களுக்கு ஏற்க னவே 3 பெண் குழந்தைகள் உள்ள னர். மீண்டும் கர்ப்பிணியான சிவ காமிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் ஜுலை 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சிவ காமி உயிரிழந்துவிட்டார். கை குழந் தையுடனும் 3 பெண் குழந்தைகளு டனும் பரிதவிக்கும் அப்பாதுரை கூறு கையில் முதலில் செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தொடர் சிகிச்சையும் பிர சவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கும் பிறகு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோம். அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினாங்க. எனது மனைவிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் சுகப்பிர சவத்தில் பிறந்த நிலையில் நான்கா வது குழந்தை பிறந்ததும் இறந்த தற்கான காரணம் தெரிய வேண்டும். மருத்துவர்கள் மேல் தவறு இல்லை என்றால் எதற்காக அவசரமாக வீட்டுக்கு வந்து சிவகாமி பெற்ற சிகிச்சை ஆவணங்கள கைப்பற் றிட்டு போனாங்க. அவர்கள் மீது நட வடிக்கை எடுத்து சிகிச்சை ஆவ ணங்களை பெற்றுத்தர வேண்டும் என்றார்.  இந்நிலையில் வறுமையிலும் தாயை இழந்த துயரத்திலும் வாடும் குழந்தைகளையும் அப்பாதுரையை யும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் உஷா பாசி, ரெகுபதி, சாரதாபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோவாளை வட்டார செயலாளர் மிக்கேல், நிர்வாகிகள் அய்யப்பன், மணி, பாசி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். உஷா பாசி கூறு கையில் செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று ஒரே மாதத்தில் 2 பிரசவ கால தாய் மரணம் நிகழ்ந்துள்ளது. ஆசாரிபள்ளம், திருநெல்வேலி மருத்துவமனை களும் இதில் தவறிழைத்துள்ளன. உரிய விசாரணை நடத்தி சம் பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கும் பெண் குழந்தை களின் எதிர்காலத்திற்கும் அரசு உதவ வேண்டும் என்றார்.