tamilnadu

img

ஜன. 5-இல் அனைத்து ஆட்சியர் அலுவலகங்களில் விவசாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டம்

தூத்துக்குடி,டிச. 22 - தில்லி விவசாயிகள் போராட்ட த்தில் பங்கேற்ற தோழர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டக்குழு சார்பில் பாராட்டு  விழா தூத்துக்குடியில் மாசிலா மணிபுரம் பி.சி.வேலாயுதம் நினை வரங்கத்தில்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணி என்ற  சுப்பையா தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பெ. சண்முகம், தில்லி விவசாய போராட்டத்தில் கலந்து கொண்ட வர்களுக்கு  சால்வை அணிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறியதாவது: தில்லி போராட்டத்தில் கலந்து  கொண்டவர்களுக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் வெற்றி விழா பாராட்டு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நடந்த தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விவசாய சங்க மாவட்டத் தலைவராக ஆர். ராகவன், செயலாளராக புவிராஜ், பொருளாளராக ராமசுப்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி விழா பேரணி

தில்லி விவசாய போராட்ட வெற்றி விழா பேரணி மற்றும் பொது க்கூட்டம் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி மாநில அளவில் திருவாரூரில் நடைபெறுகிறது. இதில் ஐக்கிய விவசாய முன்னணி அகில இந்திய தலைவர் அசோக் தவாலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். இதில் மாநிலம் முழுவதும் இரு ந்து விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள் பல்லாயிரக்கணக்கா னோர் கலந்து கொள்ள உள்ளனர். உரிய இழப்பீடு வழங்குக!  கடந்த நவம்பர் மாதம் முழு வதும் பெய்த கனமழையின் காரண மாக விவசாயிகளுக்கு மிக அதிகப் படியான சேதங்கள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் 5 லட்சம் ஏக்கரில் பயி ரிடப்பட்ட நெல், பருத்தி, மக்காச் சோளம், மலர் சாகுபடி அழிந்து போய்விட்டன. ஆனால் இது வரை  தமிழக அரசு அழிந்து போன பயிர்களுக்காக விவசாயிகளுக்கு எந்த விதமான  இழப்பீடும் அறிவிக்க வில்லை, இது விவசாயிகள் மத்தி யில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் துய ரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே  தமிழக அரசு அழிந்து போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகை யில் இழப்பீடும் வழங்க வேண்டும்.  தொடர்மழையின் காரணமாக தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் கால் நடைகளை கோமாரி நோய் பாதித்துள்ளது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசாங்கம் எந்த விதமான இழப்பீடும் அறிவிக்கவில்லை. தொடர் மழையின் காரணமாக வீடு களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000, விவசாயத் தொழிலாளர் களுக்கு ரூ.10,000, கால் நடை களுக்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும்  உள்ளிட்ட  கோரிக்கை களை வலியுறுத்தி  வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விவ சாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும். முதல்வர் நிவாரணம் அளிக்கும் வரை  இந்த போராட்டம் தொடரும்.

உரத்  தட்டுப்பாடு 

தமிழகத்தில் தற்போது கடுமை யான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் வரலாறு காணாத அளவிற்கு உரத்தின் விலை உச்ச த்தை தொட்டுள்ளது.இந்த உரத் தட்டுப்பாட்டை பயன்படுத்தி உர வியாபாரிகள் உரங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கும் நடை முறை தமிழகம் முழுவதும் உள்ளது. தமிழக அரசு உரிய நேரத்தில் உரம் இறக்குமதி செய்யாமல் இருந்த தாலும், ஒன்றிய அரசாங்கம் உரத்திற்கான மானியத்தை குறைத்ததன் விளைவாகவும்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு, உரம் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலையால் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழ் நாட்டிற்கு தேவையான உரம் கிடைக்கவும், தட்டுப்பாடி ன்றி உரிய விலைக்கு விவசாயி களுக்கான உரம் கிடைக்கவும்  தமி ழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நான்கு வழி சாலைக்காக  நிலம் கையகப்படுத்துவதில் குத்தகை விவசாயிகளுக்கு முறை யான நிவாரணம் எதுவும் வழங்கப் படவில்லை. அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடுமையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார்.  பேட்டியின்போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம் உடனிருந்தார்.

 

;