tamilnadu

img

ஆன்லைன் ரம்மி தொடர்பாக விரைவில் அவசரச் சட்டம்: அமைச்சர் ரகுபதி

சென்னை,செப்.14- ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், 5 ஆண்டு  சட்டப் படிப்புகளுக்கான முதல் 10 இடங்களைப்  பிடித்த மாணவர்களுக் கான சேர்க்கை ஆணையை  அமைச்சர் ரகுபதி புத னன்று (செப்.14) வழங்கினார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனி யார் சட்டக் கல்லூரி இயங்கி  வருகிறது. சட்டக் கல்லூரி களில் மொத்தம் 1731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய் வில் நிரப்பப்படும். சட்டக் கல்லூரியில் சேர 11,597  விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன” என்றார். ஆன்லைன் ரம்மிக்கான அவசரச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும், அச்சட்டம் எந்த நீதி மன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். நீட் தேர்வு சட்ட மசோதா  குறித்து ஆளுநர் கேட்கப் பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நீட் மசோதா விற்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். துணை வேந்தர்களை மாநில அரசே  நியமிக்கும் சட்ட மசோதா விற்கு ஆளுநர் மாளிகையி லிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித் தார்.

;