tamilnadu

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: தலைமைச் செயலர் உத்தரவு

சென்னை,டிச.3- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை கணக்கெடுத்து உடனடியாக  அறிக்கை அனுப்ப வேண்டும்  என மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் வெ.இறை யன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்ட றிந்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை யாக அளிக்க தலைமை செயலா ளருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு களை கணக்கெடுப்பு செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் வெ.இறை யன்பு தலைமையில் நடந்தது. கூடுதல் தலைமை செயலாளர் கள் சந்தீப் சக்சேனா, சிவதாஸ் மீனா,  முதன்மை செயலாளர்கள் குமார் ஜெயந்த், பி.அமுதா, சுப்ரியா சாகு, `ஹித்தேஷ் குமார் மக்வானா, சட்டத்துறை செயலாளர் (சட்ட விவகாரங்கள்) பி.கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள், மாவட்ட ஆட்சி யர்கள் ஆகியோர் காணொலிக்காட்சி வழியாக கலந்துகொண்டனர். '

இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படை யில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை, நீர்வளத்துறை வழங் ்கியுள்ள படிவங்களுடன் பூர்த்தி செய்து, வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை செயலாள ருக்கு வருகிற 4 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தினார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பற்றாளராகச் செயல்பட்டு கலெக்டர்களிடம் இருந்து அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்தில் 7 ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர்கள் இதில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் இரவு  பகலாக கணக்கெடுப்புகளை நடத்தி  தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க  வேண்டும் என தலைமை செயலா ளர் வெ.இறையன்பு உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:- நீர்நிலைகளின் வரைபடங்களை தயார் செய்து ஆக்கிரமிப்புகளின் விவரங்களை படிவம் 1, 2, 3-ல்  4 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் ்கள் அனுப்ப வேண்டும். நீர்நிலைக ளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவரம் மற்றும் ஆக்கிரமிப் ்புகளை அகற்ற நீதிமன்றங்கள் பிறப்பித்த தடையாணை குறித்த  விவரங்களை தங்களது அறிக்கை களில் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பா ளர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்த பட்டி யலை அளிக்க வேண்டும்.