tamilnadu

img

உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பும்- சிக்கலும்

உப்பளத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரணம் ரூ.5000 பயனாளிகளுக்கு  உரிய காலத்திற்குள் சென்றடைவதை உறுதிப்ப டுத்துமாறு சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நகை மாலி  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்  கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க, மாநில ஒருங்கி ணைப்பாளர் எஸ். ஜி. ரமேஷ் பாபு, தமிழ்நாடு  உப்பளம் மற்றும் கடல்சார் தொழிலாளர் நல சங்கத் தலைவர்  மு.உமாநாத்  ஆகி யோருடன் தொழிலாளர் நலத்துறை அமைச் ்சர் சி.வி.கணேசனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் உப்பள தொழிலாளர்கள் மழைக் காலங்களில் போதிய மாற்றுப்பணி கிடைக்க வாய்ப்பில்லாமல், வாழ்க்கையை நடத்த பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே,  அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உடலுழைப்பு தொழி லாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு, மழைக்கால நிவாரணம் ஆண்டொன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும்” என்று தொழில் துறை, மானியக் கோரிக்கை யில் அறிவிக்கப்பட்டது.

இது அறிவிப்பை மனதார வரவேற்கி றோம். இந்த நிவாரணத்தை பெறுவதற்கு, தமிழக அரசின் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நலவாரி யத்தில் பதிவு செய்வதில் உப்பளத் தொழிலா ளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்ற னர். ஒன்றிய அரசின் உப்பு இலாகா வெளி யிட்டுள்ள 2019ஆம் ஆண்டின் அறிக்கையின் படி தமிழகத்தில் 21,528 தொழிலாளர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களுக்கு செயல்படும் தொழிற்சங்க அமைப்புகள் அளித்துள்ள தகவலின்படி தூத்துக்குடியில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் வேதாரண் ்யத்தில் 10,000 , மரக்காணத்தில் 6000 என 46  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்க ளும் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை நல வாரியத்தில் 5000 த்திற்கும் குறைவான தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.  அரசு அறிவிப்புக்கு பிறகு நலவாரியத்தில் பதிவு செய்ய முயற்சித்த உப்பள தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கீழ்வருமாறு:  

ஆதார் எண்ணுடன் அழைப்பேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமத்தை உருவாக்குகிறது. ஏனெ னில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணை க்காமல்  உள்ளனர். எனவே இதனை கட்டாயப்படுத்தாமல் ஆதார் அட்டை அல்லது தொழிலாளரிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்ய வழிவகை செய்யவேண்டும். * இணையவழி பதிவேற்றத்தில் உப்பளத் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படுகிறது. உப்பள தொழிலாளர்கள் நிரந்தரமாக ஒரே முதலாளியிடம் வேலை செய்யவில்லை.  கிடைக்கும் இடங்களில் பணிசெய்து கூலி பெறும் நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நிரந்தரமான முதலாளி அமையும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால், இணைய படிவத்தில் முதலாளி தொடர்பான விவரங்களை கொடுக்காமல் அடுத்தகட்ட பதிவுக்கு செல்ல இயலாத நிலை உள்ளது. மேலும், முதலாளிகள் தங்கள் வீட்டு முகவரி மற்றும்  உப்பளத்தின் விவரத்தினை தொழிலாளர்க ளிடம் தருவதில்லை. எனவே இத்தகவல் களை கொடுப்பதிலிருந்து உப்பள தொழி லாளிக்கு விலக்கு அளித்திட வேண்டும்.

* பெரும்பாலான தொழிலாளர்கள் கணவன் மற்றும் மனைவி என குடும்பமாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யும் பொழுது கணவன் அல்லது மனைவியின் நலவாரிய பதிவு எண் மற்றும் அவர்களின் முதலாளி குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது, பெரும்பாலான உப்பள தொழிலாளர்கள் முதல் முறையாக பதிவு செய்வதால் இந்த தகவலை கொடுக்க இயலாது. எனவே இந்த விவரம் கோருவதில் இருந்து உப்பள தொழிலாளிக்கு விலக்கு அளித்திட வேண்டும். *  மேலும் தமிழக அரசின்  நிவாரணம் உப்பள தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5000 என இல்லாமல், ஒவ்வொரு உப்பள தொழிலாளிக்கும் என மாற்றி வழங்க  நடவடிக்கை எடுக்கவேண்டும். சில குறிப்பிட்ட உப்பளத் தொழிலாளர்கள் நிறுவ னத்தையோ அல்லது ஒரு முதலாளியோ சார்ந்து உப்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு பிஎஃப் தொகை நிர்வாகம் அல்லது முதலாளி கட்டு வதால் அமைப்புசாரா தொழிலின் கீழ் வரமாட்டார்கள். இன்னும் மழையின் காரணமாக வேலை இல்லாத போது அவர்க ளுக்கு கூலி கிடைக்காது. எனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவின்  படி பதிவு செய்ய முடியாத உப்பளத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியை வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில்  தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கணேசன் ஆதார் எண் ‘ஓடிபி’ சரிபார்ப்பு  இல்லாமல் பதிய வழிவகை செய்வதாக வும், புதியதாக பதிவு செய்யும் தொழிலாளர்க ளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இணைய தள பதிவு முறை மாற்றியமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.