tamilnadu

img

என்எல்சி பணியாளர் சிக்கன சங்கம் ரூ.13.79 கோடி லாபம்

கடலுார், அக்.20- சிஐடியு தலைமையிலான நெய்வேலி என்.எல்.சி. குழும பணி யாளர்கள் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாணய சங்கத்தின் 65ஆவது ஆண்டு பேரவைக் கூட்டத்திற்கு சங்க  தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை  தாங்கி, ஆண்டறிக்கையை சமர்ப்பித் தார். செயலாளர் (பொ) முத்து,           வரவு - செலவு கணக்கை சமர்ப் பித்தார். 8,471 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் இச்சங்கம், தணிக்கை துறையால் ‘ஏ’ வகுப்பு  சான்றிதழ் பெற்றுள்ளது. கடந்தாண்டில் 1,123 உறுப்பினர்களுக்கு ரூ.100.93 கோடி கடன் வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும்  ரூ.15  லட்சம் கூடுதலாகும்  மேலும் ரூ.13.79 கோடி லாபம் ஈட்டியுள்ளதையும் இந்த கூட்டத்தில் அறிவித்தனர். உறுப்பினர் கல்விக் கடன் ரூ.5 லட்சம் ஒருமுறை மட்டும் வழங்கப்படு கிறது. கடன் தொகையில் 40 விழுக்காடு வசூலானதும், மீண்டும் கல்விக் கடன் வழங்குவது. சங்கத்திற்கு பணி யாளர்களை பணியமர்த்தும் போது  ஓ.சி., வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 30இல் இருந்து 32ஆக  உயர்த்துவது. சங்க பணியாளர்க ளுக்குவழங்கப்படும் தனிநபர் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து  ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்குவது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்க இயக்குநர்கள் கவிதா, அன்பழகன், ரேவதி, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குநர் தாமோதரன் வரவேற்றார். இயக்குநர் வீராசாமி நன்றி கூறினார்.