tamilnadu

img

முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை,அக்.10- தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், சிப்காட் நிறுவனம், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் மற்றும் சிப்காட் நிறுவனம், அண்ணாபல்கலைக் கழகத்திற்கு இடையே முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்க ளன்று (அக்.10) தலைமைச் செயல கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவிற்கான தொலைநோக்கு பார்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு வசதிகளுக்கான வழிவகைகள் மற்றும்  ஆளுமை கட்டமைப்புகள் போன்ற வற்றை வரையறுப்பதற்கும் சிப்காட் நிறுவனத்திற்கு இது உதவும். மேலும்,  வெளிநாடுகளிலுள்ள இத்தகைய பூங்காக்களிலுள்ள புதிய கண்டுபிடிப்பு களை கண்டறிந்து, அதை சூளகிரி வருங் கால நகர்திறன் பூங்காவின் வளர்ச்சிக்கு  பயன்படுத்த, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் வகை செய்யும்.  ஒரகடம் மருத்துவ உபகரணங்கள்  பூங்காவிற்கான சிறப்பு உள்கட்ட மைப்பை மேம்படுத்துவதிலும், சிப்காட் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும், மருத்துவ தொழில்நுட்பத் துறையிலுள்ள உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்துவதோடு மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தயாரிப்புகளை உருவாக்க  அண்ணா பல்கலைக் கழகம் தன் கிளை  நிறுவனங்கள் மூலம் சிப்காட் நிறுவ னத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளுக்கு உதவும்.

தொழிற்பூங்காக்கள் தேர்வு 

 கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில், ரூ.1.95 கோடி யிலும், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.1.88 கோடியி லும் கட்டப்பட்டு உள்ள திட்ட மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடங்கள், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிப்காட் நிறு வனத்தின் 2021-2022-ம் நிதியாண்டிற் கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.61.20 கோடிக்கான காசோலையினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தொழில், முதலீட்டு  ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி னார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.