tamilnadu

img

மோடியின் கடமையும் நமது கடமையும்

நெல்லை மாவட்டத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட  வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்குமார் குடும்ப பாதுகாப்பு நிதியாக சங்கத்தின் கேரள மாநிலக்குழு திரட்டிய ரூபாய் 5 லட்சத்து 26 ஆயிரத்திற்கான காசோலையை கேரள மாநிலத் தலைவர் வாசிப், மாநிலச் செயலாளர் வி.கே.ஷனோஜ் ஆகியோர்  தியாகி அசோக்கின் தாயாரிடம் வழங்கினர். தியாகி அசோக்கின் குடும்பத்தை பாதுகாக்கும் விதமாக உணர்ச்சிப்பெருக்கோடு கேரளத்தில் இளைஞர்கள் நிதி திரட்டி அளித்திருப்பது மகத்தான தோழமையின் அடையாளம் என தனது உரையின்போது சு.வெங்கடேசன் எம்.பி., பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தில்லி ராஜபாதையை பிரதமர் மோடி ‘கடமைப் பாதை’ என்று பெயர் மாற்றியுள்ளார்.  மோடி அவர்களே அதானிக்கும், அம்பானிக்கும் ஆதரவாக செயல்படுவதைத் தவிர உங்களுக்கு வேறு ஏதாவது கடமை இருக்கிறதா? பொதுத்துறையை பெரு முத லாளிகள் காலில் கொண்டு வந்து போடு வதைத் தவிர வேறு ஏதாவது கடமை இருக்கிறதா?  தற்போது மழைக்காலம் நான்கு மாதத்திற்கு பட்டினப்பிரவேசம் செய்யக் கூடாது என ஆன்மீக மரபு உள்ளது. ஆன்மீகப் பற்று உள்ளவர்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட வர்கள் யாரும் வெளியே வர மாட்டார்கள். ஏனென்றால் பல்வேறு உயிரினங்கள் இந்த மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் பிரசவிக்கும். அதனால் ஆன்மீகப் பற்று உள்ள வர்கள் வெளியே வர மாட்டார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் தெருவுக்கு தெரு பிள்ளையார் சிலையை வைத்துக் கொண்டு அம்பானி - அதானியிடம் வாங்கிய தொகையை கொடுத்து பிள்ளையார் சிலை யை சிறுபான்மையினர் வாழும் இடங்களுக் கெல்லாம் எடுத்துச் சென்று, அமைதியாய் இருக்கிற நாட்டில் மதவெறியை ஏற்படுத்தி வேறுபாட்டை உருவாக்கும் சிறுமைப் புத்தியுடன் செயல்படுகிறார்கள்.  

ஆன்மீகத்தையும், மதத்தையும் ஜாதியையும் வைத்து கலவரத்தை உரு வாக்குவது உங்களது கடமை என்றால் கல வரத்தை அடக்குவது எங்களின் கடமை. உங்களின் பின்னால் மத வெறியர்கள் இருக்கி றார்கள்; எங்களின் பின்னால் தேசத்தைக் காக்கிற இளைஞர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை எப்படி எல்லாம் பறிபோகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம், உத்தரப்பிரதேசத்தில் தமிழக மாணவர்கள் அல்லாதவர்களுக்கு 59 பேருக்கு ரயில்வேயில் பணி ஆணை வழங்கப் பட்டது; இதில் வாலிபர் சங்கம் போராடியதன் பேரில் வலுவாக தலையிட்டோம். அதன் பயனாக, பணி ஆணையை ரத்து செய்து தமிழகத்தைச் சேர்ந்த 59 இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பாடுபட்ட இயக்கம் வாலிபர் சங்கம். ரயில்வேயில் பணி ஆணையை ரத்து செய்து உடனடியாக வழங்கிய வரலாறு உண்டா?

அந்த வரலாற்றைப் பதிவு செய்த இயக்கம் தான் வாலிபர் சங்கம். இந்த சம்பவம் நடைபெற்று சில மாதங்கள் கழித்து சென்னை ரயில் நிலை யத்திற்கு வந்த என்னை கூட்டமாக ஊழியர்கள் நின்று பாராட்டு தெரிவித்தனர். இது வெறும் 59 பேருக்கான பிரச்சனை மட்டும் இல்லை; ரயில்வேயில் ஆண்டுக்கு 35 லட்சம் தமிழக இளைஞர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கான வெற்றி இது என்றார்கள். எனவே தமிழக இளைஞர்களுக்கு  இழைக்கப்படும்  அநியாயத்திற்கு எதிரான குரலை உடைத்தெறிவோம்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வாலிபர் சங்க மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரையிலிருந்து

;