ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா மோதல்
மினி உலகக்கோப்பை 2025
கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (குரூப் ஏ) அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.
பரிதாப நிலையில் பாகிஸ்தான்
மினி உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. புதனன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி மினி உலகக்கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவி மோசமான வரலாற்றை தக்க வைத்துள்ளது. மினி உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக ஒரே அணியிடம் மற்றொரு அணி தோல்வியை தழுவியது கிடையாது என்ற நிலையில், 2000, 2006, 2009, 2025 ஆகிய 4 மினி உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து வீழ்த்தியுள்ளது.
ஹாட்ரிக் சாதனையை தவற விட்ட அக்சர் படேல்
மினி உலகக்கோப்பையின் 2ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. வியாழக்கிழமை அன்று துபா யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் தொடக்கத்திலேயே மிடில் ஆர்டரை இழந்தது வங்கதேச அணி. குறிப்பாக அக்சர் படேல் வீசிய 9ஆவது ஓவரின் 2 மற்றும் 3ஆவது பந்துகளில் தொடர்ச்சியாக அடுத்த டுத்து விக்கெட்டுகள் விழுந்தன. 4ஆவது பந்திலும் விக்கெட் விழும் வாய்ப்பு கிடைத்தது. வங்கதேச வீரர் ஜேகர் அலியின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச்சாக சென்றது. ஆனால் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோகித் சர்மா அதைப் பிடிக்க தவறி விட்டார். இந்தக் கேட்ச்சை பிடித்திருந்தால் அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்து இருப்பார். ஆனால் ரோகித் சர்மாவால் இந்த சாதனை வாய்ப்பு பறிபோனது. கேட்ச் தவறவிட்ட விரக்தியில் ரோகித் சர்மா மைதானத்தில் கையை வைத்து பலமுறை ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின்னர் அக்சர் படேலிடம் மன்னிப்பும் கேட்டார்.
மீண்டும் ஆசிய ஸ்னூக்கர் பட்டம் வென்றார் பங்கஜ் அத்வானி
கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இந்தப் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஈரானின் அமிர் சர்கோஷை இந்திய வீரர் பங்கஜ் அத்வானி எதிர்கொண்டார். முன்னாள் ஆசிய சாம்பியனும், 6 முறை உலக ஐபிஎஸ்எப் 6 ரேட்ஸ் ஸ்னூக்கர் சாம்பியனுமான அமிர் சர்கோஷை பெரியளவில் அழுத்தமின்றி எளிதாக வீழ்த்தி பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். பங்கஜ் அத்வானிக்கு இது 14ஆவது ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும்.