tamilnadu

img

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு

சென்னை, ஜன. 9 - கொள்முதல் விலையை உயர்த்தக்  கோரி திங்களன்று (ஜன.9) ஆவின் தலைமையகத்தில் பால் உற்பத்தி யாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொள்முதல் விலையை மறுபரி சீலனை செய்து கூடுதல் விலை அறி விக்க வேண்டும், வேளாண் விளை பொருட்களைப் போன்றே பாலுக்கும் ஆண்டுதோறும் கொள்முதல் விலை  நிர்ணயிக்க வேண்டும், நுகர்வோ ருக்கு பால் விற்பனை விலையை லிட்ட ருக்கு 3  ரூபாய் அரசு குறைத்ததால் ஏற்பட்ட 300 கோடி ரூபாய் இழப்பை ஈடு  செய்ய வேண்டும், கலப்பு தீவனங் களை 50 விழுக்காடு மானியத்தில் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் பேசினார்.

அதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்  செயலாளர் டி.ரவீந்திரன் உள்ளிட் டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து  அலுவலகத்திற்குள் சென்று காத்தி ருப்பு போராட்டத்தை தொடங்கினர். பேச்சுவார்த்தை இதனையடுத்து ஆவின் மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன்,  சங்கத் தலைவர்களை அழைத்து 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தை உற்பத்தி யாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.