tamilnadu

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, ஜன. 2 - குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழ்நாடு கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய இலங்கை கடற் ்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்களன்று (ஜன.3) குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜன.4 அன்று தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜன. 5,6 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.