tamilnadu

வெள்ளாத்துகோட்டையில் போலிச்சாமியார் முனுசாமி அட்டூழியம்

சென்னை,பிப்.24-  வெள்ளாத்துகோட்டையில் போலிச்சாமி யார் முனுசாமியின் அட்டூழியம் குறித்தும் செம்மேடு கிராம இளம்பெண் மர்ம மரணம் குறித்தும் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பூண்டி ஒன்றியத்தின் பகுதிக்கு உட்பட்ட  வெள்ளாத்து கோட்டை கிரா மத்தில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. அதன் பூசாரியும் அதன் நிர்வாகியுமான முனு சாமி என்ற போலிச் சாமியார் அங்கேயே சிறு ஆசிரமத்தையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்த கோவிலுக்கு குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் வேண்டி செல்வது ண்டு. இதை பயன்படுத்திக் கொண்ட போலிச் சாமியாரான முனுசாமி பெண்களை வைத்து பூஜை செய்வது, அவர்களுக்கு மருந்து தரு வது என்ற பெயரில் பணம் பறிப்பதும் தகாத  செயல்களில்  ஈடுபட்டதாகவும் தெரிகிறது.  இந்நிலையில்  கடந்த 17 ஆம் தேதியன்று  அந்த கோவிலுக்கு சென்ற செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.  அவர் எப்படி இறந்தார் என்பது  இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த செய்தி அன்றே  மாலைமலர்  மற்றும் மாலைமுரசு பத்திரிகைகளிலும்  வெளிவந்துள்ளது.    இறந்துபோன அந்த பெண்ணின் சொந்த கிராமமான பெரியபாளையம் அருகில் உள்ள செம்மேடு  கிராமத்திற்குச் சென்ற  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினர், இறந்து போன இளம் பெண்ணின் தாய், தந்தை மற்றும் உறவினர்களை சந்தித்து விசாரித்தனர். இதில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும்   எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்? என்பது மர்மமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார்கள். ‘‘என் மகளுக்கு நீதி கிடைக்கசெய்யுங் கள். என் மகளை போல பல இளம் பெண்கள் அந்த போலிச் சாமியாரிடம் சிக்கியிருக் கின்றனர். அவர்களை காப்பாற்றுங்கள். அவனை கைது செய்யுங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டி கேட்டுக் கொண்டனர்.

போலிச்சாமியாரால் மக்கள் அச்சம்

இந்தக் கோயிலுக்கு ஆந்திரா ,கர்நாடகா  உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் குழந்தை பேறு இல்லாதவர்கள் வருவதாக தெரிகிறது. இரவு நேரத்தில் பூஜை நடத்துவ தாக பெண்களை வைத்து, அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்தில் மயக்க மருந்து கொடுத்து தவறாக பயன்படுத்தியதாகவும்  தெரிகிறது.பொதுவாக சமீப காலங்களில்   மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. இதுபோன்ற பல சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே தமிழக அரசு சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சீல் வைத்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இளம்பெண்ணின் மரணம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.பாதிக்கப் பட்ட அந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும். அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள், கோயிலையும் பூசாரி முனுசாமி குறித்தும் மிகுந்த அச்சத்தோடு உள்ளார்கள். எனவே உடனடியாக பொது மக்கள் அச்சத்தைப் போக்கக் கூடிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள் வதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும்  உடனடி தேவை.  பெண்களை ஏமாற்றுவது  அவர்களை பலிகடாவாக்க கூடிய வகையில் செயல்படக்கூடிய போலிச்சாமியார் முனு சாமியின் செயலை  ஜனநாயக மாதர்சங்கத் தின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.