tamilnadu

ஹரியானா முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, டிச. 11- பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை (நமாஸ்) செய்வதை  சகித்துக் கொள்ள முடியாது என்று ஹரியானா முதல்வர் அறிக்கை வெளி யிட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முஸ்லிம்கள் பொது இடங்களில் தொழுகை (நமாஸ்) செய்வதை சகித்துக்கொள்ள முடியாது என்று டிசம்பர் 10 வெள்ளிக்கிழமையன்று ஹரி யானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் ஆட்சேபகரமானது என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறது.  

பொது இடங்களில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடுவது தொடர்ந்து நடைபெற்று வரு வதாகும். ஹரியானா முதலமைச்சரின் இத்தகைய அறிக்கையை ஏற்க முடியாது. மேலும் ஹரியானா முதல்வர், குர்கானில் வெள்ளிக்கிழமையன்று பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்திட அளிக்கப்பட்டி ருந்த அனுமதியையும் தற்போது விலக்கிக்கொண்டுள்ளார். (மசூதிக ளுக்குச் சென்று தொழுகை செய்வதற்கு அவர்கள் உரிமை பறிக்கப்பட்டிருந்த தால் அவர்கள் இவ்வாறு பொது இடங்க ளில் தொழுகை செய்து வந்தனர்.) கடந்த சில மாதங்களாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பஜ்ரங் தளம் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவ்வாறான இடங்களில் தொழுகை மேற்கொள்வதற்கு இடையூறுகள் செய்து வந்தனர் அல்லது அவற்றைத் தடுத்து வந்தனர்.

இவ்வாறு பஜ்ரங் தள ஆட்கள் இடையூறு செய்வதை அனு மதித்து அந்த நபர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் நின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் தொழுகை மேற் கொள்ளும்போது அவர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களைத் தண்டிப்ப தற்குப் பதிலாக, முஸ்லிம்கள்  அமைதி யாக தொழுகை மேற்கொள்ள அனு மதிப்பதற்குப் பதிலாக, முதலமைச்சர் இந்தியக் குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள அரசமைப்புச்சட்ட அடிப்படை உரிமையையே மறுத்துக் கொண்டிருக்கிறார்.       முதலமைச்சரின் இந்த முடிவு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஹரியானா மாநில அரசாங்கம் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகைகள் அமைதியான முறை யில் நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்றும், முஸ்லிம் சமூகத்தினர் வக்ப் சொத்துக்களின் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கும் மசூதிகள் கட்டிக்கொள்வதற்கும் அனுமதித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;