மாநகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
மதுரை, மே 22- மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட் டம் திங்களன்று மேயர் வ.இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவப் பிரிவிற்காக இராமநாதபுரம் பழைய மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கட்டடம் கட்டும் பணிக்காக நிலத்தை மாற்றம் செய்து வழங்குவது என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. தொடர்ந்து மண்டலத் தலைவர்கள் வழக்கம் போல், தங்களுடைய மண்ட லங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் குடி நீர் மற்றும் சாலை மேம்பாடு, பாதாளச் சாக்கடை, தெரு விளக்கு மற்றும் ஊழி யர் பற்றாக்குறை ஆகியவற்றை சுட் டிக்காட்டினர். மாமன்ற உறுப்பினர்கள் சிலர், பல்வேறு வார்டுகள் கண்டு கொள்ளப் படாத பகுதியாக உள்ளது. தெரு விளக்கு, சாலை பராமரிப்பு, பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். தற்போது பெய்த மழை யால் சாலைகள் மிகவும் மோசமாக உள் ளது எனக் குற்றம் சாட்டியதோடு சாலை களை மேம்படுத்த வேண்டும் என வலி யுறுத்தினர். மாமன்ற உறுப்பினர்கள் தங்க ளுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று வெளியே செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. மாதம் ஒருமுறை மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு மூன்று மணி நேரம் கூட ஒதுக்கி நம்மால் காத்தி ருக்க முடிவதில்லை? என்றார். டி.குமரவேல் (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி: மதுரை மாநகராட்சி ஊழி யர்களை அதிகப்படுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 1- ஆம் தேதியில் இருந்து 5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எப்பொழுது முடிவடை யும். மதுரை மாநகரில் இந்த வேலை நடைபெறும் இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் வேலை நடைபெறுகிறது. இப்பணி கார ணமாக சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்க ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. செல்லூர் - குலமங்கலம் பிரதான சாலையில் ஒரு வருடமாக முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி கள் நடைபெறுவதால் இருசக்கர வாகன போக்குவரத்து மட்டுமே உள் ளது. அதுவும் சாலை மோசமாக இருப்ப தால் தினசரி விபத்து நடக்கும் பகுதியாக உள்ளது எனவே அவற்றை உடனடி யாக சீரமைக்க வேண்டும் வண்டியூர் கண்மாய்க்கு நிதி ஒதுக் கப்பட்டு வேலைகள் இன்னும் ஆரம் பிக்கவில்லை. தென்கால், மாடக் குளம், கொடிக்குளம், செல்லூர் ஆகிய கண்மாய்களை பொதுப்பணித்துறை நிர்வாகத்தோடு மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஆழப்படுத்தி நிலத்தடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை பெரியார் பேருந்து நிலை யத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. போதுமான வசதிகள் செய்து தர வேண்டும். தல்லாகுளம் - கோரிப்பாளையம் மேம்பாலம், கீழவாசல் - தெற்கு வாசல் மேம்பாலம் பணிகள் எப்போது தொடங் கப்படும். வைகை வடகரை - ஓபுளா படித்துறை பாலம் பணிகள் முடிந்துள்ள நிலையில் அதை விரைவில் திறக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அனைத்து வார்டுகளி லும் தெருப்பகுதிகளிலும் சாலைகள் அமைக்க மதுரை விவரங்கள் கொடுக் கப்பட்டுள்ளது அந்தப் பணிகள் எப் பொழுது தொடங்கும். எனக் கேள்வி யெழுப்பினார். 96- ஆவது வார்டு உறுப்பினர் என். விஜயா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மாமன்றக் கூட்டம் முகூர்த்த நாட்களில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் மாமன்ற உறுப்பினர்களே இல்லாமல் கூட்டம் நடத்தும் நிலை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், “96-ஆவது வார்டில் தெரு விளக்குகள் மற்றும் பூங்காக்களில் விளக்குகள் பழுதடைந்துள்ளது அவற்றை மாற்றுவதற்கு ஊழியர்கள் வரவேண்டும். ஊழியர்கள் வராத தால் தெருவிளக்குகள் மாற்றப்படாமல் உள்ளது குடிநீர் குழாய் பணிகளுக்கு தோண்டப்பட்டு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது அவற்றை சரி செய் வதற்கு ஊழியர்கள் பணம் பெறு கிறார்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார். மாநகராட்சி கூட்டம் நிறைவு பெறும் போது 17 மாமன்ற உறுப்பினர்களே அரங்கத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.