தேனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
தேனி, டிச.9- தேனி அருகே வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிப்பட்டது. இது தொடர்பாக இருவரை கைது செய்து தேனி அல்லிநகரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேனி அல்லிநகரம் காவல்துறை யினர் அல்லிநகரம் பாண்டிகோயில் பகுதி யில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கைலாச பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (22), ராம் குமார் (25) ஆகியோரை சோதனை செய்தனர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த 21கிலோ கஞ்சா அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இன்னொரு குற்ற வாளி கங்கா என்பவரை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற தம்பதி கைது
சிவகாசி, டிச.9- திருத்தங்கல்லில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட தம்பதியரை காவல்துறை யினர் கைது செய்தனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒரு தம்பதியரை பிடித்து விசாரித்த னர். பின், அவர்களிடம் நடத்திய சோதனை யில், கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை யினர் 2 பேரையும் கைது செய்து அவர்களி டம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.3,630 மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசா ரணையில், அதிவீரன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சிவன் (40), அவரது மனைவி சாந்தி (38) என தெரியவந்தது.
வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்
மதுரை, டிச.9- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த உசி லம்பட்டி அருகே நோட்டம்பட்டியைச் சேர்ந்த பெத்தான், ஜெயராமன், வீரன், சுக்கினி, பெரியராமன், ஆண்டிச்சி, பொன் னுச்சாமி, தங்கம், கௌரி, அழகுநாச்சி, சின்னாண்டி, மணிகண்டன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாலாந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வைப்பாற்றில் மூழ்கிய சிறுவன் பலி
சாத்தூர், டிச.9- சாத்தூர் காட்டுபுதுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது 3வது மகன் ஹரிகரபிரபு (14). வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழ மான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த நண் பர்கள், காப்பாற்ற முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. பின்பு, தகவலறிந்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு, ஹரிஹர பிரபு உடல் ஆற்றின் கரையோரம் இருந்த முட் புதரில் இருந்து மீட்டனர்.
நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி 166 சவரன் நகை, பணம் கொள்ளை
மதுரை, டிச.9- மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பெஸ்ட் மணி கோல்டு என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறு வனத்தில் பணிபுரிந்து வரும் மேலாளர் மைக்கேல்ராஜ், ஊழியர் செல்வம் மற்றும் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் ரூ.50 லட்சத்துடன் காரில் விழுப்புரத்தில் உள்ள தங்களது நிறுவனம் மற்றும் மற்ற நிதி நிறுவனங்களில் ஏலம் விடப்பட்ட, ரூ.49 லட்சம் மதிப்பிலான 166 சவரன் தங்க நகை கள் மற்றும் ரூ.ஒரு லட்சத்துடன் மதுரை நோக்கி திரும்பியுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் - கொட்டாம்பட்டி அருகே அய்யா பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் காரில் வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் நிதிநிறுவன ஊழியர்கள் வந்த காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். பின்னர் அவர்களை தாக்கி காரில் இருந்த 166 சவரன் தங்க நகை மற்றும் ரூ.ஒரு லட்சத்துடன் ஊழியர்கள் வந்த காருடன் தப்பித்து சென்றனர். இதுகுறித்து நிதி நிறுவன அதிகாரி களிடம் தகவல் அளித்துவிட்டு, கொள்ளை சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்டு தப்பிச் சென்ற கொள் ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நிதி நிறுவன ஊழி யர்களிடம் இருந்து, கொள்ளையர்கள் பறித்து சென்ற கார் கொட்டாம்பட்டி அருகே நிற்பதை அறிந்த காவல்துறையினர் காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் எஸ் பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, நிதி நிறு வன ஊழியர்களிடம் கொள்ளையில் ஈடு பட்ட மர்ம நபர்கள். காரில் துவரங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.